Home
News

இனி நோ டேட்டா, ஒன்லி வேலிடிட்டி.. அறிமுகமான வேகத்தில் 2 புதிய Jio திட்டங்களில் திருத்தம்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் கேமிங் திட்டங்களின் நன்மைகளை திருத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஜியோவின் கேமிங் ப்ரீபெய்ட் பிளான்களின் கீழ் 2 மெயின் பிளான்கள் மற்றும் 3 ஆட்-ஆன் பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஜியோ அடிக்கடி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதும், அதில் திருத்தங்கள் செய்வதையும் அல்லது அதை நிறுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளது. "இந்நிறுவனம் சந்தை சோதனையை நடத்தி வருகிறது அல்லது வெவ்வேறு சலுகைகளை பரிசோதிப்பதாக டெலிகாம்டாக்கின் சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது.

அறிமுகமான வேகத்தில் 2 புதிய Jio திட்டங்களில் திருத்தம்!

இருப்பினும், அறிமுகப்படுத்தப்பட்ட 1 வாரத்திற்குப் பிறகு, ஜியோ கேமிங் ஆட் ஆன் பிளான்களின் டேட்டா நன்மை நீக்கபட்டுள்ளது சற்று கவனிக்கத்தக்கதாக உள்ளது. ஜியோவின் கேமிங் பிளான்களின் கீழ் 3 ஆட்-ஆன் பிளான்கள் உள்ளன: ரூ.48, ரூ.98 மற்றும் ரூ.298. இவைகளில் முதல் 2 திட்டங்கள் ஆன ரூ.48 மற்றும் ரூ.98 ஆட் ஆன்களின் கீழ் கிடைத்த 10எம்பி டேட்டா நீக்கப்பட்டுள்ளது.

இப்போது இவைகள் முறையே 3 நாட்கள் மற்றும் 7 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்குகின்றன. மூன்றாவதாக உள்ள ரூ.298 ஆட் ஆன் பிளானில் எந்த மாற்றமும் இல்லை. இது அதே 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் சேர்த்து, 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோ நிறுவனம் அதன் திட்டங்களில் அமைதியான முறையில் மாற்றங்களை செய்து வருவதால், குழப்பத்தைத் தவிர்க்க ரீசார்ஜ் செய்யும் போது பொருந்தக்கூடிய நன்மைகளைச் சரிபார்ப்பது நல்லது.

ஜியோ ரூ.48 கேமிங் ஆட்-ஆன் திட்டத்தின் நன்மைகள்: இந்த தொகுப்பில் மிகவும் மலிவு விலை நிர்ணயம் கொண்ட திட்டம் ரூ.48 கேமிங் ஆட்-ஆன் பிளான் தான். இது ஜியோ கேம்ஸ் கிளவுட்டுக்கு 3 நாள் சந்தாவை வழங்குகிறது. தற்போது இந்த திட்டம் எந்த டேட்டா அல்லது குரல் / எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது; இது ஜியோ கேம்ஸை அணுகுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும்.

ஜியோ ரூ.98 கேமிங் ஆட்-ஆன் திட்டத்தின் நன்மைகள்: ரூ.98 மதிப்புள்ள இந்த கேமிங் ஆட்-ஆன் ஜியோ கேம்ஸ் கிளவுட் சந்தாவை 7 நாட்களுக்கு வழங்குகிறது. இனி இதுவும் எந்த டேட்டா அல்லது குரல் / எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது; இது ஜியோ கேம்ஸை அணுகுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும்.

ஜியோ ரூ.298 கேமிங் ஆட்-ஆன் திட்டத்தின் நன்மைகள்: ரூ.298 இன் கீழ் பயனர்கள் 28 நாட்கள் ஜியோ கேம்ஸ் கிளவுட் அணுகலையும் 3ஜிபி அதிவேக டேட்டாவையும் பெறுவார்கள். டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ் அல்லது எஸ்எம்எஸ் நன்மைகள் இருக்காது.

ஜியோ ரூ.495 கேமிங் திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டம் கேமிங்கை விட அதிகமாக வழங்குகிறது. ஜியோ கேம்ஸ் கிளவுட், ஃபேன்கோட், ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆகியவற்றிற்கான 28 நாள் சந்தாவை வழங்குகிறது. மேலும் பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி மற்றும் 5 ஜிபி கூடுதல் அதிவேக டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றையும் பெறுவார்கள். கூடவே 90 நாள் ஜியோசினிமா சந்தா மற்றும் 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜும் கிடைக்கும்.

ஜியோ ரூ.545 கேமிங் திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா + 5 ஜிபி போனஸ், ஜியோ கேம்ஸ் கிளவுட், ஃபேன்கோட், ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆகிய நன்மைகள் 28 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் இது ரூ.495 திட்டத்தை போலவே வாய்ஸ்மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை தக்கவைத்து கொள்கிறது. கூடுதலாக, பயனர்கள் 90 நாட்களுக்கு ஜியோசினிமா மொபைல்/டிவி சந்தா மற்றும் 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜையும் பெறுவார்கள்

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Revised Its Gaming Add On Packs Now Rs 48 and Rs 98 Only Offers 3 Days 7 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X