குஷியில் குடியரசு தினம்.. மாதம் ரூ.249 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
குடியரசு தினத்தை முன்னிட்டு மாதம் ரூ.249 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஸ்விக்கி கூப்பன், விமான டிக்கெட் தள்ளுடி உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகப்படியான டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோ குடியரசு தின ஆஃபர் (Jio Republic Day Offer) காரணமாக கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 2.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 912.5 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இந்த 2.5 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.
அதோடு அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Unlimited True 5G Data) சலுகை வழங்கப்படுவதால், ஜியோ வெல்கம் ஆஃபர் (Jio Welcome Offer) பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roamig Voice Calls) செய்துகொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஆண்டு முழுவதும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இவ்வளவு சலுகைகள் போக குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.125 மதிப்புள்ள 2 ஸ்விக்கி கூப்பன்கள் (Swiggy Coupons) வழங்கப்படுகிறது. ரூ.299க்கு மேல் ஸ்விக்கில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல இக்சிகோ (Ixigo) ஆப்பில் விமான டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
மேலும், அஜியோ (Ajio) தளத்தில் ரூ.2,499 மதிப்பில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட சில புராடக்ட்களை மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டிருக்கும். அதேபோல டைரா (Tira) தளத்தில் 30 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதற்கு ரூ.999 விலைக்கும் மேல் ஆர்டர் செய்திருக்க வேண்டும்.
இதுபோக ரிலையன்ஸ் டிஜிட்டல் (RelianceDigita) தளத்தில் குறிப்பிட்ட சில புராடக்ட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.5000க்கு மேல் ஆர்டர் செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.1000 வரையில் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதற்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதைவிட கம்மியான விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது.
ஜியோ ரூ 2545 திட்ட விவரங்கள் (Jio Rs 2545 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கப்படவில்லை. இருப்பினும், கம்மியான விலையில் 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், முந்தை திட்டத்தை போலவே வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல், 5ஜி டேட்டா சலுகையை பெறலாம்.
இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 504 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும்.
மேலும், ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஜியோவில் ஒரு வருட வேலிடிட்டி திட்டங்களில் இந்த திட்டம் மட்டுமே மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இதுபோன்ற டெலிகாம் செய்திகளுக்கு எங்களை பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








