Home
News

புது ஆஃபர்.. 2025-க்கு 365 நாட்கள்.. குடியரசு தினத்துல Jio-க்கு சல்யூட்.. வாரி வழங்கிய அம்பானி.. எந்த திட்டம்?

2025ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை (2025 Republic Day) முன்னிட்டு 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் இலவச சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது ஜியோ (Jio) நிறுவனம். திட்டத்தின் விலையைவிட அதிகமாக சலுகைகள் கிடைப்பதால், ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பட்டையை கிளப்புகிறது. எந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், இந்த ஜியோ குடியரசு தின சலுகைகள் (Jio Republic Day Offer) கிடைக்கும்? இதோ விவரங்கள்.

ஜியோவில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், இந்த சலுகைகளை பெற்று கொள்ளலாம். வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டிக்கெட் புக்கிங்கில் திட்டத்தைவிட கூடுதலாக சலுகைகள் கிடைக்கின்றன.

புது ஆபர்! 2025-க்கு 365 நாட்கள்.. குடியரசு தினத்துல Jio-க்கு சல்யூட்!

என்னென்ன சலுகைகள் இருக்கிறது? இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை (Yearly Prepaid Plan) ரீசார்ஜ் செய்தால், குடியரசு தின சலுகையின் கீழ் ரூ.500 ஆஃபர் கொடுக்கும்படியான அஜியோ (AJIO) ஷாப்பிங் கூப்பன்கள் 2 வழங்கப்படும். ரூ.2999 மதிப்புள்ள ஆர்டர்களை செய்யும்போது, இந்த ரூ.1,000 மதிப்பிலான 2 கூப்பன் ஆஃபர்களை பெற்று கொள்ளலாம்.

ஆன்லைனில் பியூட்டி புரொடெக்ட்களை கொடுக்கும் டைரா (Tire) ஷாப்பிங்கிலும் ரூ.500 மதிப்பிலான ஆஃபர்களை கொடுக்கும் 2 கூப்பன்கள் வழங்கப்படும். ரூ.999 மதிப்பிலான ஆர்டர்களை நீங்கள் செய்யும்போது இந்த ஆஃபர்கள் கொடுக்கப்படுகிறது. ஆன்லைன் பிளைட் டிக்கெட் புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கும் இதில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

அதாவது, ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) மூலம் டிக்கெட் புக்கிங் செய்தால், உங்களுக்கு ரூ.1,500 ஆஃபர் கொடுக்கப்படும். இப்போது, ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஆஃபரை பார்ப்போம். முன்னணி ஃபுட் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.150 ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இதை பெற ரூ.499-க்கு ஆர்டர் வேல்யூ இருக்க வேண்டும்.

ஜியோ ரூ 3599 திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. இதுபோக தினசரி டேட்டா (Daily Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) போன்ற சலுகைகள் இருக்கின்றன. தினசரி டேட்டாவில் 2.5 ஜிபி கொடுக்கப்படுகிறது.

அன்லிமிடெட் 5ஜி மற்றும் 2.5 ஜிபி டேட்டா இருந்தாலும், போஸ்ட் டேட்டாவாக 64 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 2.5 ஜிபி டேட்டா முடிந்தாலும், உங்களால் குறைவான வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, டேட்டாவில் துளியும் இந்த வருடாந்திர திட்டத்தில் குறை இருக்காது. கால்களும் அப்படித்தான்.

365 நாட்களில் அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளும்படி சலுகை இருக்கிறது. எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் வருடம் முழுவதும் செய்து கொள்ள கிடைக்கிறது. இந்த சலுகைகள் அல்லாமல், ஜியோ ஆப்களின் சலுகை இருக்கிறது.

அதாவது, அனைத்து ஜியோ திட்டங்களுக்கும் கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய சலுகைகள் கிடைக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக பல்வேறு சலுகைகளை வருடம் முழுவதும் கொடுக்கும் திட்டத்தில் குடியரசு தின சலுகை கிடைப்பதால், கஸ்டமர்கள் மேலும் குஷியாகிவிட்டனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Republic Day Offer 2025 For Rs 3599 Plan With 365 Days Validity Check AJIO Tira Swiggy Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X