ஜியோ பயனர்கள் கவனத்திற்கு.. இனி ''இந்த'' நான்கு திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்காது..

|

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 99, ரூ. 153, ரூ. 297, மற்றும் ரூ. 594 ஆகிய நான்கு ஜியோபோன் திட்டங்களை நிறுவனம் தற்பொழுது அதன் பட்டியலிலிருந்து நீக்கம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் ஜியோபோன் ஆல்-இன்-ஒன் திட்டங்கள் போன்ற ஜியோ அல்லாத குரல் அழைப்பு நிமிடங்களை வழங்கவில்லை என்பதனால், ஜியோ டெல்கோ நிறுவனம் நீக்கம் செய்ய முடிவு செய்து, இந்த திட்டங்களை அகற்றியுள்ளது.

சில ஜியோ திட்டங்கள் இனி கிடைக்காது

சில ஜியோ திட்டங்கள் இனி கிடைக்காது

ரூ. 99, ரூ. 297 மற்றும் ரூ. 594 ஆகிய ஜியோபோன் திட்டங்கள் முறையே 28, 84 மற்றும் 168 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. இந்த மூன்று திட்டங்களும் வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்பு நன்மையுடன் வருகிறது. இதில் ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கான அழைப்பு நிமிடங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ. 10 க்கு தொடங்கும் எஃப்யூபி திட்டங்கள்

ரூ. 10 க்கு தொடங்கும் எஃப்யூபி திட்டங்கள்

இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்த ஜியோபோன் பயனர்கள், ரூ. 10 க்கு தொடங்கும் எஃப்யூபி திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தகவல்படி, ரூ. 153 JioPhone திட்டம் ரூ. 155 திட்டம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், ஜியோபோன் ரூ. 153 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும், வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்பு வழங்குகிறது.

டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? மக்களே உஷார்.!

ரூ. 75, ரூ. 125, ரூ.155 மற்றும் ரூ. 185 திட்டங்கள்

ரூ. 75, ரூ. 125, ரூ.155 மற்றும் ரூ. 185 திட்டங்கள்

இத்திட்டத்தில் ஜியோ அல்லாத நிமிடங்கள் இல்லை. மேலும், இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. தற்போது, ​​ஜியோவின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ரூ. 75, ரூ. 125, ரூ.155 மற்றும் ரூ. 185 ஆகிய ஜியோபோன் திட்டங்களை மட்டுமே ஜியோ வழங்கி வருகிறது. இந்த திட்டங்கள் ஜியோ வாடிக்கையாளர்களிடையே வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது.

500 நிமிட குரல் அழைப்பு எதற்கு தெரியுமா?

500 நிமிட குரல் அழைப்பு எதற்கு தெரியுமா?

இத்துடன் ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிட குரல் அழைப்பு நிமிடங்களுடன் வருகின்றது. ரூ. 75 ரீசார்ஜ் திட்டம் 3 ஜிபி டேட்டாவையும், ரூ. 125 ரீசார்ஜ் திட்டத்தில் 14 ஜிபி டேட்டாவையும், ரூ. 155 ரீசார்ஜ் திட்டம் 28 ஜிபி டேட்டாவையும், ரூ. 185 ரீசார்ஜ் திட்டம் 56 ஜிபி டேட்டாவை பயனருக்கு வழங்குகிறது.

Razer அறிமுகம் செய்த Project Hazel ஸ்மார்ட் மாஸ்க்.. வேறலெவல் ஹை-டெக் மாஸ்க் தான் இது..

புதிய திட்டங்கள்

புதிய திட்டங்கள்

பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திட்டங்களைப் பயன்படுத்தி வந்த பயனர்களுக்கு, இனிமேல் அந்த பழைய திட்டங்கள் கிடைக்காது, ஆகையால், மேலே குறிப்பிட்டுள்ள நான்கு புதிய திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Removes Rs 99, Rs 153, Rs 297, and Rs 594 Jio Phone Plans From It's Recharge List : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X