Jio பயனர்கள் கவனத்திற்கு.. இனி இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் போனஸ் டேட்டா கிடைக்காது.. எந்த திட்டம்?
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் விதமாக அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தை விட மலிவு விலையில் அதிக டேட்டா தரும் திட்டங்களை வைத்துள்ளது இந்த ஜியோ நிறுவனம்.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஒரு முக்கியமான ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்த போனஸ் டேட்டா நன்மையை நீக்கியுள்ளது. அதாவது ஜியோ நிறுவனம் தற்போது ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் போனஸ் டேட்டாவை நீக்கியுள்ளது. இதில் முன்பு எவ்வளவு போனஸ் டேட்டா கிடைத்தது, இப்போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது. ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 40ஜிபி போனஸ் டேட்டா நன்மையை வழங்கியது. தற்போது அந்த 40ஜிபி போனஸ் டேட்டா தான் நீக்கப்பட்டுள்ளது. ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த 40ஜிபி சில காலங்கள் மட்டுமே கிடைக்கும் என ஜியோ கூறியிருந்தது. அதன்படி சில காலங்கள் மட்டுமே கிடைத்த 40ஜிபி டேட்டா தற்போது நீக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து போனஸ் டேட்டாவை நீங்கள் விரும்பினால், ரூ.299, ரூ.749, ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். தற்போது இந்த மூன்று திட்டங்கள் போனஸ் டேட்டா நன்மையை வழங்குகின்றன. மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இப்போது ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த அந்த இரண்டு திட்டங்கள் மற்றும் அதில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.
ஜியோ நிறுவனம் வரும் மாதங்களில் இன்னும் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு இறுதியில் ஜியோ நிறுவனம் தனது முதல் 5ஜி போனையும் அறிமுகம் செய்ய உளளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








