அடிச்சான் பாரு அம்பானி.. உங்க பிளான் எனக்கு தெரியும்.. அதான் இந்த 2 Jio பிளானை தூக்கிட்டேன்.. இனி கிடைக்காது..
ஜியோ (Jio) நிறுவனம் இரவோடு இரவாக அதன் ப்ரீபெய்ட் (Prepaid), போஸ்ட்பைட் (Postpaid) மற்றும் டேட்டா வவுச்சர் (Data Voucher) போன்ற அணைத்து திட்டங்களின் டேரிஃப் விலையையும் (Jio Tariff Hike) 22% அதிகரித்துள்ளது. இந்த புதிய விலை மாற்றம் வரும் ஜூலை 3, 2024 ஆம் தேதி முதல் இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் அமலுக்கு வருகிறது. இதனால், ஜியோ பயனர்கள் இப்போதே அதிக வேலிடிட்டி கொண்ட திட்டங்களை முன்னெச்சரிக்கையாக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய பார்க்கிறார்கள். இதை ஜியா நிறுவனம் முடக்கம் செய்ய புது முடிவை எடுத்துள்ளது.
ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் தீடீர் விலை அதிகரிப்பு அறிவிப்பு இந்தியாவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. காரணம், ஜியோ அதன் விலை அதிகரிப்பு தகவலை அறிமுகம் செய்த பிறகு, ஏர்டெல் நிறுவனமும் கூட அதன் விலை அதிகரிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், இந்த முக்கியமான இரண்டு டெலிகாம் நெட்வொர்க் பயனர்கள் மத்தியில் குழப்பம் உருவாகியுள்ளது.

சத்தமில்லாமல் 2 ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுவனம் நீக்கியுள்ளது (Jio has quietly removed 2 Jio prepaid plans):
இந்த புதிய விலை அதிகரிப்பு ஜூலை 3ம் தேதி முதல் அறிமுகமாகிறது என்பதனால், சில ஜியோ பயனர்கள் இப்போதே அட்வான்ஸ் ஆக குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய புத்திசாலித்தனமாக யோசித்து ஐடியா செய்து ரீசார்ஜ் செய்ய பார்க்கிறார்கள். அம்பானி மூளைக்காரர் ஆச்சே, சும்மா விடுவாரா? அம்பானி உடனே மற்றொரு ஸ்கெட்ச்சை போட்டு, தனது சூட்சம வேலையை இப்போது காட்டிவிட்டார்.
ஆம், சத்தமே இல்லாமல், நேற்று வரை ரீசார்ஜ் செய்ய கிடைத்த இரண்டு ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோநிறுவனம் அதன் வலைத்தளத்தில் இருந்து மொத்தமாக தூக்கிவிட்டது. ஜியோ நிறுவனம் நேற்று வரை வழங்கி வந்த ஜியோ ரூ. 395 திட்டம் (Jio Rs 395 Plan) மற்றும் ஜியோ ரூ. 1559 திட்டம் (Jio Rs 1559 Plan) ஆகிய இரண்டு திட்டங்களை நிறுவனம் இப்போது முடக்கம் செய்து, பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது.
அதாவது, ஜியோ ரூ. 395 திட்டம் (Jio Rs 395 Plan) மற்றும் ஜியோ ரூ. 1559 திட்டம் (Jio Rs 1559 Plan) ஆகிய இரண்டு திட்டங்களை மட்டும் இப்போது ஜியோ பயனர்களால் ரீசார்ஜ் செய்ய இயலாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களை தவிர வேறெந்த திட்டத்தை வேண்டுமானாலும் பயனர்கள் இப்போது இருக்கும் ரீசார்ஜ் பேக்கிற்கு மேல் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
அம்பானி மூளைக்காரர் ஆச்சே, சும்மா விடுவாரா? அதான் ஜியோ ரூ. 395 மற்றும் ரூ. 1559 திட்டத்தை தூக்கிட்டார்:
ஆனால், இந்த இரண்டு திட்டங்கள் மட்டும் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் ஜியோவின் மிகவும் பிரபலமான திட்டங்களாகும். ஏனெனில் இவை ட்ரூலி அன்லிமிடெட் 5G டேட்டாவுடன், மிக நீண்ட செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகின்றன என்பதே முக்கியமான காரணமாகும். ஜியோவின் ரூ.395 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வந்தது. அதேபோல், ரூ.1559 திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பே சொன்னது போல ஜியோ பயனர்கள் இப்போது மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யலாம். தற்போது ரீசார்ஜ் செய்து வைத்து கியூவில் நிற்கும் திட்டம் பயனர்களின் தற்போதைய திட்டம் காலாவதியாகிய பிறகு ஆக்டிவேட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இனி யாராலும் ரூ.395 மற்றும் ரூ.1559 திட்டங்களை அடுத்த சில தினங்களுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாது.
ஆனால், ஜூலை 3ம் தேதி முதல் புதிய விலை அதிகரிப்புடன் இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். தற்போது ரூ. 395 விற்பனை செய்யப்பட்ட திட்டம், 6GB டேட்டா நன்மையுடன், 84 நாள் வேலிடிட்டியை வழங்கி வந்தது. இதே நன்மைகளுடன் இனி இது ரூ. 479 விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேப்போல், ஜியோ ரூ. 1559 திட்டம், 24GB டேட்டா நன்மையுடன், 336 நாள் வேலிடிட்டி நன்மையை வழங்கி வந்தது. இனி இது ரூ. 1899 விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ பயனர்கள் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் இந்த திட்டங்களை உடனே ரீசார்ஜ் செய்வார்கள் என்பதை அறிந்து, ஜியோ நிறுவனம் இந்த திட்டங்களை தற்போது மொத்தமாக நீக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








