Home
News

அம்பானிக்கு கும்பிடு.. ரேட் ஏத்துனது மட்டுமில்ல.. இனிமே ரீசார்ஜ் பண்ணா.. இதெல்லாம் கிடையாது.. இதை விட்டீங்களே!

ஜியோ ப்ரீபெய்ட் (Jio Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் (Postpaid) கட்டண உயர்வு (Price Hike) மீதே ஒட்டுமொத்த கஸ்டமர்களின் கவனம் இருக்கிறது. ஆனால், ஜியோ நிறுவனம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ், சோனிலிவ், ஜீ5 போன்ற ஓடிடி சலுகைகள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பல்வேறு திட்டங்களை சைலன்ட்டாக சம்பவம் செய்துவிட்டது. இனிமேல் ஜியோ ரீசார்ஜ் (Jio Recharge) செய்யும்போது, இந்த திட்டங்களை அப்டியே மறந்து விடுங்கள். இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை 3ஆம் தேதி ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், எல்லா திட்டங்களின் விலையும் உயர்த்தப்படவில்லை. அதேநேரத்தில் முக்கியமான திட்டங்களை ஜியோ முற்றிலும் நீக்கியும் இருக்கிறது. இனிமேல் கஸ்டமர்களுக்கு கிடைக்காத திட்டங்களாக அவை மாறிவிட்டன. இதில் ஓடிடி மற்றும் அதிக வேலிடிட்டி திட்டங்கள் இருப்பதால், அதிருப்தி இருக்கிறது.

அம்பானிக்கு கும்பிடு.. ரேட் ஏத்துனது மட்டுமல்ல.. இனிமே ரீசார்ஜ் பண்ணா?

ஜியோ நீக்கப்பட்ட திட்டங்கள் (Jio Removed Plans): சோனிலிவ், ஜீ5 ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 2 ஜிபி டேட்டா சலுகையை 84 நாட்களுக்கு கொடுத்த ரூ.909 திட்டம் நீக்கப்பட்டுவிட்டது. அதேபோல 84 நாட்கள் வேலிடிட்டியில் சோனிலிவ் சந்தா மட்டும் கொடுத்த ரூ.806 திட்டம் மற்றும் ஜீ5 சந்தா மட்டும் கொடுத்த ரூ.805 திட்டங்களும் நீக்கப்பட்டுவிட்டன.

மேலும், 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பல்வேறு திட்டங்கள் நீக்கப்பட்டுவிட்டன. ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ சந்தாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை வருடம் முழுவதும் கொடுத்துவந்த ரூ.3227 திட்டம் நீக்கப்பட்டது. டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சலுகை, வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா கொடுத்த ரூ.3178 திட்டம் நீக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஜியோ கஸ்டமர்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்து வந்த ரூ.2999 திட்டம் நீக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைத்தது. அடுத்து சோனி லிவ் சாந்தா கொடுத்த ரூ.3226 திட்டம் நீக்கப்பட்டது.

இந்த திட்டத்திலும் 365 நாட்கள் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா சலுகைகள் கிடைத்தன. அதேபோல 365 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமல்லாமல். சோனிலிவ் மற்றும் ஜீ5 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து வந்த ரூ.3662 திட்டம் நீக்கம் செய்யப்பட்டுவிட்டது.

ஜீ5 சந்தாவுடன், தினசரி 2 ஜிபி டேட்டா சலுகை, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கொடுத்த ரூ.3225 மதிப்பிலான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் நீக்கப்பட்டது. இறுதியாக ஜியோ டிவி ப்ரீமியம் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் சந்தாவை கொடுத்த ரூ.4498 திட்டம் நீக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 78 ஜிபி போனஸ் டேட்டா கிடைத்து வந்தது.

அதுமட்டுமல்லாமல், தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகையும் கிடைத்தது. ஆகவே, மேற்கூறிய திட்டங்களில் பெரும்பாலும் சோனிலிவ் மற்றும் ஜீ5 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஓடிடி சந்தா கொண்ட திட்டங்களை பெறுவது இனிமேல் ஜியோ கஸ்டமர்களுக்கு நடக்காத காரியமாக இருக்கப்போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Removed Annual And OTT Subscription Prepaid Plans After Recharge Price Hike Check Full List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X