Home
News

இனி இவ்வளவு நாள் தான் வேலிடிட்டி கொடுக்க முடியும்.. மலிவு விலை திட்டங்களில் திடீர் மாற்றம்.. Jio அதிரடி..

ஜியோ (Jio) நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களில் பல மாற்றங்களை செய்துள்ளது. அதாவது சில முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கி வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுவந்தது. குறிப்பாக இந்த வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் டேட்டா நன்மையை மட்டும் வழங்காது, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையை மட்டுமே வழங்கும்.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் இரண்டு டேட்டா திட்டங்களில் வேலிடிட்டி நன்மையை கூட மாற்றியுள்ளது. அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.69 மற்றும் 139 டேட்டா திட்டங்களின் வேலிடிட்டி தான் தற்போது மாற்றப்பட்டுள்ளது. முன்பு பேஸ் திட்டத்தின் (Base Plan) வேலிடிட்டி வரையில் இந்த ரூ.69 மற்றும் 139 டேட்டா திட்டங்களின் டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இனி இவ்வளவு தான் வேலிடிட்டி கொடுக்க முடியும்.. Jio அதிரடி..

எடுத்துக்காட்டாக நீங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பேஸ் திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்திருந்தால் அதுவரை இந்த டேட்டா திட்டங்களின் டேட்டாவை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது ரூ.69 மற்றும் 139 ப்ரீபெய்ட் திட்டங்கள் சில நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்குகிறது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி தகவல்களைப் பார்க்கலாம்.

தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.69 டேட்டா திட்டத்தை (Reliance Jio Rs 69 Data Plan) நீங்கள் தேர்வு செய்தால் 6ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். அதேபோல் ரிலையன்ஸ் ஜியோ ரூ.139 டேட்டா திட்டத்தை (Reliance Jio Rs 139 Data Plan) தேர்வு செய்தால் 12ஜிபி டேட்டா மற்றும் 7 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ நிறுவனத்தின் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 98 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.

இனி இவ்வளவு தான் வேலிடிட்டி கொடுக்க முடியும்.. Jio அதிரடி..

ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்(Disney Plus Hotstar) வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற சலுகைகளை ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio reduced validity of Rs 69 and Rs 139 data plans: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X