Home
News

TRAI க்கு பயந்து Jio பார்த்த வேலை.. ரூ.210 விலை குறைப்பு.. இனி மாசம் ரூ.159 போதும்.. 336 நாள் வேலிடிட்டி!

டெய்லி டேட்டா (Daily Data) அல்லது மொத்த டேட்டா (Total Data) என, ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் எந்தவொரு டேட்டா நன்மையையும் தேவைப்படாத வாடிக்கையாளர்கள், தத்தம் சிம் கார்டுகளை குறைந்த செலவில் நீண்ட நாட்களுக்கு ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள உதவும் எஸ்டிவி (STV - ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்) திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று டிராய் (TRAI) உத்தரவிட்டு இருந்தது!

அதற்கு இணங்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது, ரூ.458 மற்றும் ரூ.1958 க்கு 2 புதிய வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை அறிமுகம் செய்தது. ஆனால் இவ்விரு திட்டங்களும் எதிர்பார்த்த அளவிற்கு மலிவான திட்டங்களாக தெரியவில்லை. ஆகையால், அறிமுகம் செய்யப்பட்ட சில தினங்களிலேயே இவ்விரு திட்டங்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

Jio: ரூ.210 விலை குறைப்பு.. மாசம் ரூ.159 போதும்.. 336 நாள் வேலிடிட்டி!

ஜியோவின் என்ட்ரி லெவல் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் ஆக அறிமுகமான ரூ.458 ஆனது தற்போது ரூ.10 விலை குறைக்கப்பட்டு ரூ.448 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதேபோல ரூ.1958 க்கு அறிமுகம் செய்யப்பட்ட எஸ்டிவி தற்போது ரூ.210 விலை குறைக்கப்பட்டு ரூ.1748 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ரூ.10 விலை குறைக்கப்பட்ட ரூ.448 திட்டத்தின் நன்மைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. ஆனால் ரூ.210 விலை குறைக்கப்பட்டும் ரூ.1748 திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது? இவ்விரு திட்டங்களின் நன்மைகள் என்ன? இவைகளை ரீசார்ஜ் செய்யலாமா அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டும், விலை குறைக்கப்பட்டுள்னன வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை ரீசார்ஜ் செய்யலாமா? எது லாபம்? இதோ விவரங்கள்:

ஜியோ ரூ.448 வாய்ஸ்-ஒன்லி பிளானின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ரூ.448-ன் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்

ஏர்டெல் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் தற்போது ரூ.499 க்கு பதிலாக ரூ.30 விலை குறைப்பை பெற்று ரூ.469 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதாவது ஜியோவை விட ரூ.21 அதிக விலைக்கு கிடைக்கிறது. இது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கினாலும் 900 எஸ்எம்எஸ்களை மட்டுமே கொடுக்கும்.

அதாவது ஜியோவை விட 100 எஸ்எம்எஸ்கள் குறைவாக வழங்குகிறது. ஆக எது பெஸ்ட் என்ட்ரி லெவல் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் என்று கேட்டால் - ஜியோவின் ரூ.448 தான் வின்னர்! அடுத்ததாக உள்ள ஜியோவின் ரூ.1958 திட்டமானது ரூ.210 விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.1748 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. விலையோடு சேர்த்து இதன் வேலிடிட்டியும் 365 நாட்களில் இருந்து 336 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

நன்மைகளை பொறுத்தவரை இது 336 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்களை வழங்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும். ஏர்டெல் நிறுவனத்திடமும் ரூ.1849 உள்ளது. தற்போது இது ரூ.110 விலை குறைப்பை பெற்று ரூ.1849 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஆனால் ஜியோவை போல் வேலிடிட்டி குறைக்கபடவில்லை. இது தொடர்ந்து 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. கூடவே 3600 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. ஆனால் இது ஜியோவை விட ரூ.101 விலை அதிகமாகும். ஆனால் மாதாந்திர செலவை ஒப்பிட்டு பார்க்கும் போது ஜியோவின் ரூ.159-ஐ விட ஏர்டெல்லின் ரூ.154 மலிவானதாக இருக்கிறது. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களிடம் தனிப்பட்ட வேலிடிட்டி விருப்பத்திற்கு ஏற்ப இவ்விரு திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Reduced Prices of Newly Launched Voice SMS Only Plan To Rs 448 Rs 1748
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X