வெறும் ரூ.149 செலவில் 24 ஜிபி டேட்டா கிடைச்சா வேணாம்னு சொல்லுவோமா? ஜியோவில் பலே மலிவு திட்டம்..
ஜியோ நிறுவனம் சமீபகாலமாகப் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் அதன் சில ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் சில மாற்றங்களையும் மாற்றி தனது பயனர்களுக்குப் பல நன்மைகளுடன் மலிவு விலையில் கிடைக்கும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஜியோவிடம் கிடைக்கும் ஒரு மலிவான திட்டத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். வாருங்கள் நேரடியாக விஷயத்திற்குப் போகலாம்.

பட்ஜெட் பிரிவிலும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு பட்ஜெட் பிரிவிலும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இலவச அழைப்பு நன்மையுடன், அட்டகாசமான டேட்டா நன்மையுடன் வழங்கி வருகிறது. மலிவு விலையில் சிறந்த திட்டங்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக ஜியோ சில பிரத்தியேக திட்டங்களை வைத்துள்ளது. இதில் கூடுதல் நன்மையாக ஜியோ பயனர்களுக்கு ஜியோ சினிமா (JioCinema), ஜியோ சவன் (JioSaavn) போன்ற ஜியோ இலவச நன்மைகளும் கிடைக்கிறது.

ரூ.149 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
சரி, இப்போது ஜியோவிடமிருந்து மலிவு விலையில் கிடைக்கும் 24ஜிபி டேட்டா திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஜியோ தனது மலிவு விலை திட்டங்களின் பிரிவில் ரூ.149 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைச் சிறந்த மலிவு விலை திட்டமாக வைத்துள்ளது. இந்த திட்டம் தனது விலைக்குத் தகுந்தாற்போல் 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நாட்கள் உடன் வருகிறது. இத்துடன் அனைத்து நெட்வொர்களுக்கான இலவச அழைப்பு நன்மையையும் உங்களுக்கு கிடைக்கிறது.

மொத்தம் 24 ஜிபி டேட்டா
டேட்டா நன்மையைப் பொறுத்தவரை, இந்த ரூ.149 திட்டமானது பயனர்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த வழியில், ஜியோ பயனர்களுக்குக் கிடைக்கும் 24 நாட்கள் செல்லுபடியாகும் நாட்களில் ஒட்டு மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த மலிவான விலையில் அழைப்பு நன்மை, ஜியோ சினிமா போன்ற கூடுதல் நமைகளுடன் கிடைக்கும் சிறந்த திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

100 இலவச எஸ்.எம்.எஸ்
இதில் உள்ள மற்றொரு நன்மை தினமும் பயனர்களுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ் நன்மையையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இப்போது பெரும்பாலான நபர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தொடர்பில் உள்ளதால் எஸ்.எம்.எஸ் பயன்பாட்டின் தேவை இப்போது குறைந்துள்ளது.

டேட்டா அளவை பார்த்து ரீசார்ஜ்
மக்கள் இதனாலேயே டேட்டா அளவை பார்த்து தங்களின் ரீசார்ஜ் திட்டங்களைத் தேர்வு செய்கின்றனர். ஜியோவில் மலிவாக அதிக நன்மையுடன் ஒரு திட்டம் உங்களுக்கு வேண்டுமென்றால் இந்த திட்டத்தை லிஸ்டில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications