இறங்கி அடிச்ச ஜியோ.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. நெட்பிளிக்ஸ்.. வாய்ஸ் கால்கள்..
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜயோ நிறுவனம். குறிப்பாக ஜியோ கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன.
அதேபோல் ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் இலவச நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகள் என்னென்ன? வேலிடிட்டி எவ்வளவு நாள் என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1099 Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜியோ பயனர்கள் இந்த ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டாவை பெறமுடியும். மேலும் இந்த திட்டத்தில் பல சலுகைகள் உள்ளன.
அதன்படி இந்த ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கப்படுகிறது. எனவே உங்களுக்குப் பிடித்த புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவற்றை எளிமையாகப் பார்க்க முடியும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். மேலும் ஜியோ நிறுவனத்திடம் உள்ள இன்னொரு நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா திட்டத்தை பார்க்கலாம்.
ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 1499 Plan) ரீசார்ஜ் செய்தால் தினமும் 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கப்படுகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம். ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது. பின்பு இந்த திட்டமும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது.
ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. பின்பு இந்த ஏர்டெல் திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா, விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle)போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








