பட்டைய கிளப்பும் ஜியோ.. கம்மி பட்ஜெட்ல 84 நாள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஜியோ நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கம்மி விலையில் அதிக டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. எனவே தான் ஏர்டெல்லை விட ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.
அதேபோல் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 84 நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட்திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த திட்டங்களை நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 666 Recharge Plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டம் மொத்தமாக 126ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.
அதேபோல் ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 719 Recharge Plan) தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோ ரூ.739 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 739 Recharge Plan) தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 126ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவை (JioSaavn Pro Subscription) இலவசமாக வழங்கும் இந்த திட்டம்.
அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் ஜியோ ரூ.739 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.789 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 789 Recharge Plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் ஜியோசாவ்ன் ப்ரோ சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ஜியோ ரூ.999 ப்ரிபெய்ட் திட்டம் (Jio Rs 999 Recharge Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








