ஒரே ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 2.5GB டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. தெறிக்கவிடும் ஜியோ..
ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம்.
அதேபோல் ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.2999 ப்ரீபெயட் திட்டம் (Jio Rs 2999 Recharge Plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே பயனர்கள் இந்த ஜயோ ரூ.2999 ப்ரீபெயட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை உள்ளது. இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோ ரூ.3178 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3178 Recharge Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இதில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 730ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் இந்த திட்டம் மூலம் ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷனை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் ஜியோ ரூ.3178 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோ ரூ.3225 ப்ரீபெய்ட் (Jio Rs 3225 Recharge Plan) திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜீ5 (Zee5)-க்கு சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது.
ஜியோ ரூ.3226 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3226 Recharge Plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர சோனி லிவ்-க்கு (SonyLiv) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது.

ஜியோ ரூ.3227 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3227 Recharge Plan) ஆனது ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது ஜியோ ரூ.3227 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud)போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 4498 Recharge Plan) ஆனது சோனிலிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் போன்ற 14 ஒடிடி சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








