Home
News

Jio: தினமும் ரூ.7.93 மட்டுமே செலவு.. 84 நாட்களுக்கு இவ்வளவு நன்மையா? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!

ரிலையன்ஸ் ஜியோ (Jio) பயனர்களே இன்னுமா 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு மாத திட்டத்தை ரீசார்ஜ் செய்கிறீர்களா? இனி இந்த குறைந்த வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்வதைத் தவிர்த்துவிட்டு, 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும் நடுத்தர கால ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து பாருங்கள். உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள். ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வழங்கும் விருப்பங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையுடன் ரீசார்ஜ் செய்யுங்க

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையுடன் ரீசார்ஜ் செய்யுங்க

இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ இப்போது அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 20% ஜியோமார்ட் மஹா கேஷ்பேக்கை வழங்குகிறது. குறைந்தது ரூ.200 விலைக்கு மேல் இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்கு ரூ.200 வரை கேஷ் பேக் நன்மை கிடைக்கிறது. நீங்கள் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து 84 நாட்கள் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், இந்த சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது.

84 நாட்கள் வேலிடிட்டி திட்டங்கள் மீது கிடைக்கும் நன்மைகள்

84 நாட்கள் வேலிடிட்டி திட்டங்கள் மீது கிடைக்கும் நன்மைகள்

பொதுவாகப் பயனர்கள் 56 நாட்கள் திட்டங்களைத் தேர்வு செய்கிறார்கள், ஆனால், அதற்குப் பதிலாகச் சற்று அதிகமாகச் செலவழித்தால் உங்களுக்குக் கூடுதலாக 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறுகிறார்கள். அப்படி கணிசமான விலையில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறந்த 84 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் ஜியோ ரீசார்ஜ் திட்டம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் முழு நன்மை விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

தினமும் 1.5ஜிபி, 2ஜிபி மற்றும் 3ஜிபி கிடைக்கும் திட்டங்கள்

தினமும் 1.5ஜிபி, 2ஜிபி மற்றும் 3ஜிபி கிடைக்கும் திட்டங்கள்

நீங்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கூடிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், ஜியோவின் ரூ. 666 ப்ரீபெய்ட் திட்டம் தான் உங்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய விருப்பமாக இருக்கிறது. இத்துடன் நிறுவனம் இன்னும் 2 திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் 1.5ஜிபி, 2ஜிபி மற்றும் 3ஜிபி போன்ற பல்வேறு தினசரி டேட்டா நன்மைகளுடன் வருகின்றது. வழக்கம் போல் டேட்டா அளவிற்கு ஏற்ப இந்த திட்டங்களின் விலைகள் வேறுபடுகிறது.

Jio ரூ.666 திட்டம்

Jio ரூ.666 திட்டம்

இதில் பட்ஜெட் விலையில் நீங்கள் சிறந்த நன்மைகளுடன் கூடிய ஒரு திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், ரூ.666 திட்டம் தான் உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த ரூ.666 திட்டமானது பட்ஜெட் விலையில் போதுமான நமைகளுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்தத் திட்டம் உங்களுக்குத் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன், ஜியோ வழங்கும் இலவச நன்மைகளான jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது.

Jio ரூ.719 திட்டம்

Jio ரூ.719 திட்டம்

அடுத்தபடியாக, ஜியோவிடம் இருந்து கிடைக்கும் ரூ.719 விலை திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன், இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்குக் கூடுதல் நன்மைகளாக ஜியோ வழங்கும் இலவச நன்மைகளான jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

Jio ரூ.1199 விலை திட்டம்

Jio ரூ.1199 விலை திட்டம்

இதேபோல், ஜியோவிடம் இருந்து கிடைக்கும் மற்றொரு திட்டம் பற்றிப் பார்க்கையில், இந்த திட்டம் உங்களுக்கு 3ஜிபி தினசரி டேட்டாவை ரூ.1199 விலையில் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன், இலவச நன்மைகளான jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது.

தினமும் வெறும் ரூ. 7.93 விலையில் இவ்வளவு நன்மையா?

தினமும் வெறும் ரூ. 7.93 விலையில் இவ்வளவு நன்மையா?

இந்தத் திட்டங்கள் மிகவும் விலையுயர்ந்த வரம்பிற்கு உட்பட்டவை போல் உங்களுக்குத் தெரியலாம், ஆனால், தினசரி அடிப்படையில் நாம் செலவு செய்யும் கட்டணமாக இதைப் பார்த்தால், உங்களிடம் இருந்து செலவாகும் கட்டணம் குறைவாகத் தெரியும். ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 666 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால், உங்களுக்கிற்கு தினமும் வெறும் ரூ. 7.93 என்ற விலையில் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

மற்ற திட்டங்களை தேர்வு செய்தால் உங்களுக்கான தினசரி கட்டணம் எவ்வளவு தெரியுமா?

மற்ற திட்டங்களை தேர்வு செய்தால் உங்களுக்கான தினசரி கட்டணம் எவ்வளவு தெரியுமா?

அதேபோல், ஜியோ வழங்கும் ரூ.719 விலை திட்டம் மற்றும் ரூ.1199 விலை திட்டத்தை நீங்கள் கருத்தில் கொண்டால், உங்களுடைய தினசரி கட்டணம் முறையே வெறும் ரூ.8.56 மற்றும் ரூ.14.27 என்ற விதத்தில் செலவாகிறது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த திட்டங்கள் ஒரு மாத திட்டங்களை விடச் சிறந்த தேர்வாக இருக்கிறது. முக்கியமாக மாதம்-மாதம் ரீசார்ஜ் செய்வதை தவிர்ப்பதனால் உங்களுடைய நேரம் மிச்சமாகிறது. சரி, இனி முடிவு உங்களுடையது தான், உங்களுக்கு எந்த திட்டம் சரியான தேர்வு என்பதை சூஸ் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Recharge Plan Starting From Rs 666 By Spending Only Rs 7.93 Per Day Comes WIth 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X