தினசரி 1.5ஜிபி டேட்டா தரும் ஜியோவின் அட்டகாச திட்டங்கள்.!
ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான டேட்டா திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக இந்நிறுனம் அறிமுகம் செய்த பட்ஜெட் விலை திட்டங்கள் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். அண்மையில் வெளியான தகவலின்படி பல மில்லியன் சந்தாதார்களை பெற்றுள்ளது இந்த ஜியோ நிறுவனம்.

மேலும் கடந்த 2019 டிசம்பரில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்த கட்டண திருத்தத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1 ஜிபி தினசரி டேட்டா, 1.5 ஜிபி தினரி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டாக்களுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.

குறிப்பாக 1 ஜிபி டேட்டா தரும் திட்டங்களை மக்கள் அதிகளவு விரும்புவது இல்லை, ஆனால் தினசரி 2 ஜிபி மற்றும் 1.5ஜிபிஅளவிலான டேட்டா தரும் திட்டங்களை மக்கள் அதிகளவு தேர்வு செய்கின்றனர். சரி இப்போது தினசரி 1.5 ஜிபி டேட்டாதரும் ஜியோவின் அட்டகாச திட்டங்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.199 திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 42 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு டேட்டா FUP-க்கு பின்னர் 64 Kbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். குறிப்பாக வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 1,000 இலவச நிமிடங்கள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட
பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.399 திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 84 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு டேட்டா FUP-க்கு பின்னர் 64 Kbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். குறிப்பாக வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 2,000 இலவச நிமிடங்கள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட
பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.555 திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 126 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு டேட்டா FUP-க்கு பின்னர் 64 Kbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். குறிப்பாக வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 3,000 இலவச நிமிடங்கள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட
பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஜியோ ரூ.777 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.777 திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். பின்பு கூடுதலாக 5ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் இலவசமாக கிடைக்கும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 131 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதன்பின்னர் டேட்டா FUP-க்கு பின்னர் 64 Kbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். குறிப்பாக வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 3,000 இலவச நிமிடங்கள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது. ஜியோவின் இந்த ரூ.777 திட்டத்தில் ரூ.399 மதிப்புள்ள இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் VIP சந்தா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.2,121 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.2,121 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 504 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதன்பின்னர் டேட்டா FUP-க்கு பின்னர் 64 Kbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். குறிப்பாக வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 12,000 இலவ நிமிடங்கள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது. ஜியோவின் இந்த ரூ.2,121 திட்டத்தில் ரூ.399 மதிப்புள்ள இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் VIP சந்தா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications