சத்தமில்லாமல் ஏர்டெல் நிறுவனத்தின் 800மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை வாங்கிய ஜியோ?

|

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய புதிய சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம்

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஜியோ நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

 ஆயிரத்து

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற பகுதிகளுக்குட்பட்ட 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஆயிரத்து 497 கோடி ரூபாய்க்கு ஜியோ நிறுவனத்திடம் பாரதி ஏர்டெல் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன மார்க் இதெல்லாம்: சிக்னல் ஆப் பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனர்- அப்போ நம்ம நிலை!என்ன மார்க் இதெல்லாம்: சிக்னல் ஆப் பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனர்- அப்போ நம்ம நிலை!

றுவனத்திடம் இருந்து ஆயிரத்

மேலும் ஜியோ நிறுவனத்திடம் இருந்து ஆயிரத்து 37 கோடி ரூபாய் தொகை பெறப்பட்ட நிலையில் மீதமுள்ள 459 கோடி ரூபாய் வருங்கால பொறுப்பு நிதிகளாக வழங்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

ந்திரா, மும்பை, டெல்லி போன்ற

இந்த நடவடிக்கை மூலம் ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற தொலைத் தொடர்பு சரகங்களில் ஜியோவின் நெட்வொர்க் பங்களிப்பு அதிகரிக்கும் எனறு கூறப்படுகிறது.

ak.in வலைத்தளத்தில்

இதற்முன்பு வந்த தகவலின்படி, ஜியோ நிறுவனம்ஜியோபுக் லேப்டாப் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. trak.in வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த ஜியோபுக் லேப்டாப் மாடல் கம்மி விலையில்அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 ஜியோபுக் லேப்டாப்

ஜியோபுக் லேப்டாப்

ஆன்லைனில் வெளியான ஜியோபுக் லேப்டாப் மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம். புதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஃபார்ம்வேர் ஜியோ பயன்பாடுகளுடன் வரலாம் என்றும், ஜியோபுக் 4 ஜி எல்டிஇ ஆதரவை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜி

புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜி

குறிப்பாக புதிய ஜியோபுக் லேப்டாப் மாடலை உருவாக்க சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது. ஜியோ லேப்டாப் மாடல் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வடிமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஜியோ லேப்டாப் மாடல் வெளிவரும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்

ஜியோபுக் லேப்டாப் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த லேப்டாப் 2 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 32 ஜிபி ஈஎம்சி ஸ்டோரேஜ் பின்பு 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 64 ஜிபி இஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

டூயல் பேண்ட் வைஃபை,

மினி எச்.டி.எம்.ஐ போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், குவால்காம் ஆடியோ சிப், JioStore, JioMeet, JioPages ஆப்ஸ் மைக்ரோசாப்ட் டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் மைக்ரோசாப்ஃப்ட் ஆபிஸ் போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஜியோபுக் லேப்டாப்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio quietly acquired Airtel's 800 MHz spectrum: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X