ஜியோ பிரைம் திட்டம் மீண்டும் அறிமுகம்.. ஒரு வருடத்திற்கு கவலை இருக்காது.. என்னென்ன பலன்கள்? இதோ முழு விவரம்..
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் துறையில் அறிமுகமான பத்தாம் ஆண்டை முன்னிட்டு மீண்டும் ஜியோ பிரைம் (Jio Prime membership) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
குறிப்பாக இந்த ஜியோ பிரைம் திட்டம் ஆனது ஜியோ சந்தாதார்களுக்கு விலை உறுதித்தன்மையை வழங்குகிறது. அதுவும் இதன் மூலம் பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு திட்டங்களின் விலையை ஓராண்டுக்கு நிர்ணயித்துக்கொள்ள முடியும். ஆகவே ஜியோ தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தினால் கூட பயனர்கள் தங்கள் தற்போதைய திட்டத்தைப் பழைய விலையிலேயே வாங்க முடியும். மேலும் விலை நிர்ணயத்தைத் தவிர ஜியோ பிரைம் சந்தா மற்ற பலன்களையும் வழங்குகிறது.

அதாவது பிரைம் சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக அறிமுகமாகும் ஜியோ தயாரிப்புகளை மற்றவர்களைவிட முன்கூட்டியே பெறும் வாய்ப்பும் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். இதனுடன், பிரைம் உறுப்பினர்களுக்காக பிரத்யேக கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.
ஜியோ பிரைம் முக்கிய நன்மைகள்
ஜியோ பிரைம் உறுப்பினராக விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒருமுறை ரூ.300 கட்டணம் செலுத்தி சந்தாவைப் பெறலாம். இந்தச் சேவை, ஜியோவின் தற்போதைய அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இப்போது வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும் ஜியோவுக்கு மாறி, பிரைம் உறுப்பினர் திட்டத்தில் இணைந்து அதன் சிறப்பு சலுகைகளைப் பெறலாம். இந்த உறுப்பினர் திட்டத்தின் மூலம் கட்டண நிலைத்தன்மை, கூடுதல் கேஷ்பேக் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரத்யேக நன்மைகளை ஜியோ வழங்குகிறது.
ஜியோவின் பிரைம் உறுப்பினர் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களின் தற்போதைய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் ஒரு வருட காலத்திற்கு மாற்றமின்றி தொடரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உறுதித்தன்மை செப்டம்பர் 5, 2027 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் அல்லது திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், பிரைம் சந்தாதாரர்கள் தங்களது தற்போதைய விலையிலேயே போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியும். இதன் மூலம், முன்பு செலுத்தி வந்த அதே தொகையில் தொடர்ந்து சேவையைப் பயன்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும்.

இதனுடன், ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு ரூ.300 மதிப்பிலான கேஷ்பேக் வவுச்சரும் வழங்கப்படுகிறது. இந்த வவுச்சரை புதிய ஜியோஹோம் அல்லது ஜியோபிசி இணைப்பைப் பெறுவதற்கான கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக புதிய ஜியோ சிம் இணைப்பை பெற்றுக்கொடுத்தால், பிரைம் சந்தாதாரர்களுக்கு கூடுதலாக ரூ.300 மதிப்பிலான கேஷ்பேக் வவுச்சர் வழங்கப்படும்.
பிரைம் உறுப்பினர்களுக்கு, ஜியோ அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முன்கூட்டியே பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், புதிய சோதனை முயற்சிகளிலும் அவர்கள் முன்னதாகவே பங்கேற்று, அவற்றை மற்ற வாடிக்கையாளர்களுக்கு முன்பாக அனுபவிக்க முடியும்.


Click it and Unblock the Notifications