Jio பயனர்கள் ஷாக்.. இரவோடு இரவாக விலை அதிகரிப்பு.. உங்கள் ரீசார்ஜ் திட்டத்தின் புது விலை இதோ?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அதன் அணைத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையையும் (Jio Price Hike On Recharge Plans) அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அணைத்து திட்டங்கள் என்று குறிப்பிடுகையில், ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் (Jio Prepaid Plans Hike) மற்றும் போஸ்ட்பைட் திட்டங்கள் (Jio Postpaid Plans Hike) என்று எல்லா திட்டங்களின் விலையையும் ஜியோ அதிகரித்துள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரிக்கப்பட புதிய விலைகள் எப்போது அமல்படுத்தப்படும் என்ற விபரங்கள் இதோ.
ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பைட் திட்டங்களின் விலையை வரும் ஜூலை 3, 2024 ஆம் தேதி முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜியோவின் டேரிஃப் அதிகரிப்பு (Jio Tariff Hike) எல்லா பயனர்களுக்கு பொருந்தும் என்று கூறியுள்ளது. இதற்கு முன்பு நீங்கள் ரீசார்ஜ் செய்த எந்த விலை திட்டமாக இருந்தாலும், அவற்றின் விலை வரும் ஜூலை 3ம் தேதி முதல் சிறிய விலை ஏற்றத்தை காணும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிப்பு தகவலை இப்போது பார்க்கலாம்.
1. ஜியோ ரூ. 155 திட்டம், 2GB டேட்டா நன்மையுடன் இனி ரூ.189 விலையில் கிடைக்கும்.
2. ஜியோ ரூ. 209 திட்டம், தினசரி 1GB டேட்டா நன்மையுடன் இனி ரூ. 249 விலையில் கிடைக்கும்.
3. ஜியோ ரூ. 239 திட்டம், தினசரி 1.5GB டேட்டா நன்மையுடன் இனி ரூ. 299 விலையில் கிடைக்கும்.
4. ஜியோ ரூ. 299 திட்டம், தினசரி 2GB டேட்டா நன்மையுடன் இனி ரூ. 349 விலையில் கிடைக்கும்.
5. ஜியோ ரூ. 349 திட்டம், தினசரி 2.5GB டேட்டா நன்மையுடன் இனி ரூ. 399 விலையில் கிடைக்கும்.
6. ஜியோ ரூ. 399 திட்டம், தினசரி 3GB டேட்டா நன்மையுடன் இனி ரூ. 449 விலையில் கிடைக்கும். மேற்குறிய திட்டங்கள் அனைத்தும் 28 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது.
7. ஜியோ ரூ. 479 திட்டம், தினசரி 1.5GB டேட்டா நன்மையுடன் (56 நாள் வேலிடிட்டி) இனி ரூ. 579 விலையில் கிடைக்கும்.
8. ஜியோ ரூ. 533 திட்டம், தினசரி 2GB டேட்டா நன்மையுடன் (56 நாள் வேலிடிட்டி) இனி ரூ. 629 விலையில் கிடைக்கும்.
9. ஜியோ ரூ. 395 திட்டம், 6GB டேட்டா நன்மையுடன் (84 நாள் வேலிடிட்டி) இனி ரூ. 479 விலையில் கிடைக்கும்.
10. ஜியோ ரூ. 666 திட்டம், தினசரி 1.5GB டேட்டா நன்மையுடன் (84 நாள் வேலிடிட்டி) இனி ரூ. 799 விலையில் கிடைக்கும்.
11. ஜியோ ரூ. 719 திட்டம், தினசரி 2GB டேட்டா நன்மையுடன் (84 நாள் வேலிடிட்டி) இனி ரூ. 859 விலையில் கிடைக்கும்.
12. ஜியோ ரூ. 999 திட்டம், தினசரி 3GB டேட்டா நன்மையுடன் (84 நாள் வேலிடிட்டி) இனி ரூ. 1199 விலையில் கிடைக்கும்.
13. ஜியோ ரூ. 1559 திட்டம், 24GB டேட்டா நன்மையுடன் (336 நாள் வேலிடிட்டி) இனி ரூ. 1899 விலையில் கிடைக்கும்.
14. ஜியோ ரூ. 2999 திட்டம், தினசரி 2.5GB டேட்டா நன்மையுடன் (365 நாள் வேலிடிட்டி) இனி ரூ. 3599 விலையில் கிடைக்கும்.
இதே போல் ஜியோவன் டேட்டா திட்டங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1. ஜியோ ரூ. 15 டேட்டா திட்டம், 1GB டேட்டா நன்மையுடன், இனி ரூ. 19 விலையில் கிடைக்கும்.
2. ஜியோ ரூ. 25 டேட்டா திட்டம், 2GB டேட்டா நன்மையுடன், இனி ரூ. 29 விலையில் கிடைக்கும்.
3. ஜியோ ரூ. 61 டேட்டா திட்டம், 6GB டேட்டா நன்மையுடன், இனி ரூ. 69 விலையில் கிடைக்கும்.
போஸ்ட்பைட் திட்டங்களின் புதிய விலை என்ன?
இறுதியாக, ஜியோவின் போஸ்ட்பெய்டு திட்டங்களும் அதிக விலை கொண்டவையாக மாறியுள்ளது. 30ஜிபி டேட்டாவை வழங்கிய ரூ.299 திட்டம் இனி ரூ. 349 விலையில் கிடைக்கும். 75ஜிபி டேட்டாவுடன் கூடிய ரூ.399 திட்டம் இனி ரூ.449 விலைக்கு விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








