Jio மக்கள்: அட இது தெரியாம போச்சே.! இவ்வளவு கம்மி காசுக்கு தினசரி டேட்டா கிடைக்குதா?

|

டெலிகாம் நிறுவனங்கள் அவற்றின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்து வருவதனால், இப்போது மலிவு விலையில் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள். டிசம்பர் மாதத்தில் விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது என்பதனால், முடிந்த வரை உங்கள் அடுத்த Jio ரீசார்ஜை விரைந்து செய்துகொள்ளுங்கள்.

ரூ. 200 விலைக்குள் கிடைக்கும் தினசரி டேட்டா திட்டங்கள்

ரூ. 200 விலைக்குள் கிடைக்கும் தினசரி டேட்டா திட்டங்கள்

குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்வோரின் கவனத்திற்கு, ரூ. 200 விலைக்குள் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் 200 ரூபாய்க்குக் கீழ் மிகவும் மலிவு விலையில் ஒரு நல்ல அளவிலான டேட்டாவை வாங்க விரும்பினால். நீங்கள் கண்டிப்பாக ஜியோவின் 1ஜிபி தினசரி டேட்டா திட்டத்திற்குச் செல்லலாம். இது வெறும் ரூ.179 என்ற விலை முதல் வருகிறது. வாருங்கள் நேரடியாகத் திட்டத்தைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ 179 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ 179 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தை 1ஜிபி தினசரி டேட்டாவுடன் 24 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இது தவிர, ஜியோ வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 தினசரி SMS நன்மைகளை இந்த திட்டத்துடன் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் சலுகையாகப் பயனர்கள் JioTV, JioCinema, JioCloud மற்றும் JioSecurity ஆகியவற்றுக்கான இலவச சந்தாவையும் பெறுகிறார்கள். FUP (நியாயமான-பயன்பாடு-கொள்கை) நிறைவடைந்த பின் வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

டூயல் சிம் பயனர்களுக்கு விழுந்த பேரிடி.! பாதிக்கப்படப் போகும் வாடிக்கையாளர்கள்.! என்னாச்சு?டூயல் சிம் பயனர்களுக்கு விழுந்த பேரிடி.! பாதிக்கப்படப் போகும் வாடிக்கையாளர்கள்.! என்னாச்சு?

இன்னும் குறைந்த விலையில் தினசரி டேட்டா திட்டம் இருக்கிறதா?

இன்னும் குறைந்த விலையில் தினசரி டேட்டா திட்டம் இருக்கிறதா?

ஆனால் இது தொலைத்தொடர்பு நிறுவனம் வழங்கும் மிகவும் மலிவு விலையில் 1ஜிபி தினசரி டேட்டா திட்டம் அல்ல என்பதை நீங்கள் இங்குக் கவனிக்க வேண்டும். ரூ.179 விலைக்கு இந்த திட்டமே உங்களுக்கு மலிவு விலையாகத் தெரிந்தால், இதே நன்மையோடு இன்னும் மலிவான விலையில் உங்களுக்கு மற்றொரு திட்டம் கிடைக்கிறது என்று தெரிந்தால் வேண்டாம் என்ற சொல்லப் போகிறோம். ரூ.179 திட்டத்தைப் போலவே அதே பலனை வழங்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் ஜியோவிடம் உள்ளது.

ஜியோ ரூ 149 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ 149 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் திட்டம் இந்த திட்டத்தின் விலை 149 ரூபாய் ஆகும். முன்னர் பார்த்த திட்டத்தின் அதே நன்மைகளை இந்த திட்டம் ஒரே ஒரு சிறிய வேறுபாட்டுடன் வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் மட்டும் சற்று குறைவாக இருக்கிறது. ஜியோ ரூ 149 ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் நன்மைகள் பற்றிப் பார்க்கையில், ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் 1ஜிபி தினசரி டேட்டாவுடன் 20 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

பிளைட் மோடில் கூட இன்டர்நெட் யூஸ் செய்யலாமா? எப்படி? இந்த ரகசியம் பலருக்கும் தெரியாது.!பிளைட் மோடில் கூட இன்டர்நெட் யூஸ் செய்யலாமா? எப்படி? இந்த ரகசியம் பலருக்கும் தெரியாது.!

ஜியோ ரூ 209 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ 209 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.179 திட்டத்தில் வழங்கப்படும் அதே சந்தாக்களைப் பயனர்கள் இந்த திட்டத்துடனும் பெறுகின்றனர். மொபைல் ரீசார்ஜ்களில் அதிக செலவு செய்ய முடியாதவர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. FUP தரவை பயனரால் பயன்படுத்தப்பட்டவுடன் தரவு வேகம் 64 Kbps ஆக குறைகிறது . நீங்கள் இதே பலன்களை இன்னும் சற்று நீண்ட செல்லுபடியுடன் வாங்க விரும்பினால், நீங்கள் ரூ. 209 விலையில் கிடைக்கும் விருப்பத்திற்குச் செல்லலாம். இந்த திட்டத்தில், பயனர்கள் 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் 28 நாட்களுக்குச் செயலில் உள்ள சேவை செல்லுபடியாகும்.

மலிவு விலையில் பெஸ்ட் திட்டங்கள்

மலிவு விலையில் பெஸ்ட் திட்டங்கள்

ரூ.149 மற்றும் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டங்கள் போன்ற அனைத்து நன்மைகளும் ஒரே மாதிரியானது. 4G நெட்வொர்க்குடன் ஆதரிக்கப்படும் இந்தியாவில் இப்போது உண்மையிலேயே கிடைக்கக் கூடிய மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்கள் இவை மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. ரூ.200 விலைக்குள் தினசரி டேட்டா நன்மையுடன், அழைப்பு நன்மை மற்றும் SMS நன்மை ஆகியவற்றை ஒரே பேக் ஆக வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Prepaid Users Can Now Recharge Under Rs 200 to Get Daily Data At Best Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X