Home
News

தூள் கிளப்பும் Jio.. இலவச 5G டேட்டா.. போட்டி போடும் மக்கள்.. 84 நாள் வேலிடிட்டி.. ஏர்டெலுக்கு ஆப்பு..

ஜியோ (Jio) பயனர்களுக்கு ஒரு சூப்பர் ரீசார்ஜ் திட்டம் இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதிக செலவின்றி சிறந்த நன்மைகளை அனுபவிக்க விரும்பும் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Jio Prepaid Recharge Plan) தேர்வு செய்யலாம்.

இது என்ன திட்டம்? இதில் என்ன என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கிறது? இதன் விலை என்ன? இதன் சிறப்பு என்ன? இதை ஏன் பல ஆயிரம் கணக்கான ஜியோ வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு ரீசார்ஜ் செய்கிறார்கள் என்று இப்போது பார்க்கலாம். இலவச 5ஜி சேவையுடன் அட்டகாசமான நன்மைகளை வழங்கும் திட்டங்களை ஜியோ தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன.

தூள் கிளப்பும் Jio.. இலவச 5G டேட்டா.. போட்டி போடும் மக்கள்..

ஜியோ பயனர்களால் அடிக்கடி ரீசார்ஜ் செய்யப்பட்ட திட்டமாக ரூ.395 திட்டம் திகழ்கிறது. இந்த ஜியோவின் ரூ. 395 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது. இது ஏன் சிறந்த திட்டமாக திகழ்கிறது என்ற விபரங்களை இப்போது பார்க்கலாமா? ஜியோ நிறுவனம் பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து இந்த ரூ. 395 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ரீசார்ஜ் திட்டமானது அதன் விலைக்கு ஏற்ற பல சிறப்பு நன்மைகளை அடக்கியுள்ளது. இந்த திட்டம் வழக்கமான தினசரி டேட்டா கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் போன்றதல்ல. இது உங்களு மொத்த டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகிறது. எத்தனை ஜிபி டேட்டா? இந்த ஜியோவின் ரூ. 395 திட்டமானது 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.

இந்த 6ஜிபி டேட்டா நன்மையை பயனர்கள் எந்தவொரு FUP வரம்பும் இல்லாமல் அவர்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த டேட்டா நன்மை, இந்த திட்டத்தின் 84 நாள் வேலிடிட்டி முடியும் வரை செல்லுபடியாகும். அதற்குள் எப்படி வேண்டுமானாலும் இந்த 6ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் ஜியோவின் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.

தூள் கிளப்பும் Jio.. இலவச 5G டேட்டா.. போட்டி போடும் மக்கள்..

இத்துடன் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இந்த ரூ.395 திட்டத்துடன் ஜியோ வழங்கும் இலவச நன்மைகளும் கிடைக்கிறது. இந்த ரூ. 395 திட்டத்துடன் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற ஜியோவின் பிரத்தியேகமான சேவைக்கான அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது.

அதேபோல், ஜியோ 5ஜி கிடைக்கும் வட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யப்பட்ட நபர்களுக்கு இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. ஜியோ நிறுவனம் அதன் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Unlimited True 5G) திட்டத்தின் கீழ் இந்த இலவச டேட்டா நன்மையை 5ஜி வட்டங்களில் வழங்குகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி இணக்கம் இருந்தால், இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த திட்டத்துடன் கிடைக்கும் 6ஜிபி டேட்டா நிறைவடைந்த பிறகு டேட்டா வேகம் 65kbps ஆக குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் இலவச ஜியோ சினிமா சந்தையில் ஜியோ சினிமா பிரீமியம் சந்தா உள்ளடங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கு போட்டியாக திகழும் ஏர்டெல் நிறுவனம் இப்போது ரூ.399 விலையில் வழங்குகிறது. இது தினமும் 2.5ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. ஆனால், இதன் வேலிடிட்டி வெறும் 28 நாள் ஆகும். இது 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Prepaid Recharge Rs 395 Plan vs Airtel Rs 399 plan In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X