1 இல்லை 2 இல்லை.. தினமும் 3GB டேட்டா.. அள்ளிக்கொடுக்கும் Jio.. இலவச 6GB டேட்டா கூட இருக்கா? எந்த திட்டம்?
ஜியோ (Jio) நிறுவனம் என்ன தான் பல பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை (Jio Prepaid Plans) வழங்கினாலும், எப்போதும் மக்கள் ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு எதில் கூடுதல் நன்மை (Extra Benefits) கிடைக்கிறது என்று அறிந்த பிறகே ரீசார்ஜ் செய்ய முயல்கிறாரகள்.
அந்த வகையில் மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு திட்டமும் 3ஜிபி தினசரி டேட்டாவுடன் (3GB daily data) வருகிறது. இத்துடன் கூடுதல் நன்மை மட்டுமின்றி இப்போது எக்ஸ்ட்ரா இலவச நன்மைகளும் (Extra Free Benefits) கிடைக்கிறது. ஜியோ வழங்கும் மிகவும் பிரபலமான திட்டங்களின் விபரங்கள் இதோ.

ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 219 Prepaid Plans):
இந்த திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை மொத்தமாக 14 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் கூடுதல் நன்மையாக நிறுவனம் ஜியோ டிவி (JioTV ), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) நன்மையுடன் வருகிறது. இத்துடன் 2ஜிபி இலவசமாக கிடைக்கிறது.
ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 Prepaid Plans):
இந்த ரீசார்ஜ் திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். கூடுதல் நன்மையாக இந்த திட்டம் ஜியோ டிவி (JioTV ), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) போன்ற நன்மைகளை வழங்குகிறது.

இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் இத்துடன் முடிந்துவிடுவது இல்லை. இன்னும் இருக்கிறது. ஜியோ வலைத்தள பக்கத்தின் தகவல் படி, ஜியோவின் ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு கூடுதல் இலவச நன்மையாக இப்போது 6ஜிபி டேட்டா நன்மையையும் கிடைக்கிறது. இந்த எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபர் ரூ.61 மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது. 28 நாட்களுக்கு இந்த திட்டம் 84 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 6ஜிபி உடன் சேர்த்து 90ஜிபி கிடைக்கிறது.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 Prepaid Plans):
இந்த திட்டமும் அதே தினசரி 3ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது. மற்ற அணைத்து நன்மைகளும் இதில் ஒரே மாதிரியானது. ஆனால், இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் மட்டும் 84 நாட்கள் ஆகும். ஜியோ வழங்கும் எக்ஸ்ட்ரா நன்மைகள் இதிலும் உண்டு. ஆனால், இலவச கோடௌதல் டேட்டா எதுவும் இத்துடன் வராது என்பது கவனிக்கத்தக்கது. தினமும் 3ஜிபி டேட்டா வேண்டும் என்பவர்கள் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து மகிழலாம்.


Click it and Unblock the Notifications