ஒரே ரீசார்ஜ்.. 90 நாட்களுக்கு நோ டென்ஷன்.. 200ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அதிரடி காட்டும் Jio..
ஜியோ (Jio) நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சில அசத்தலான சலுகைகளும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் 30 நாள் மற்றும் 90 நாள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 749 Prepaid Plan) ஆனது 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதுதவிர 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் இதில் உள்ளது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதுதவிர வரம்பற்ற அழைப்புகள்,தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா(Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது இந்த ஜியோ ரூ.749 திட்டம். மேலும் இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக அதிக சலுகைகளை இந்த திட்டம் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

ஜியோ ரூ.256 ப்ரீபேய்ட் திட்டம் (jio Rs 256 Prepaid Plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய நன்மைகளை ரூ.256 திட்டம் வழங்குகிறது.
ஜியோ ரூ.296 ப்ரீபேய்ட் திட்டம் (jio Rs 296 Prepaid Plan) மொத்தமாக 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 349 Prepaid Plan) 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 75ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதாவது வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.349 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud)ஆகிய ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு டெலிகாம் துறையில் ரீசாஜ் கட்டண விலை உயர்வு (Recharge Tariff Hike) அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியானது. குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கண்டிப்பாக ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போதே அதிக நாள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








