ஜியோ சிம் இருக்கா? நெட்பிளிக்ஸ் சந்தா.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
ஜியோ நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா மற்றும் ஓடிடி சந்தா தரும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. எனவே தான் இந்நிறுவனங்களின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் நெட்பிளிக்ஸ் சந்தா தரும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid recharge plan) நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் இதில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதாவது ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1299 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம்.

மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ரூ.1299 மற்றும் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ஓடிடி சந்தா தரும் திட்டங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது ஜியோ நிறுவனம்.


Click it and Unblock the Notifications








