அடேங்கப்பா! ரூ.200 விலைக்குள் இத்தனை சூப்பர் Jio பிளான்ஸ் இருக்கா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்குகிறது. ஜியோ தற்போது ரூ.119 முதல் ரூ.4,199 வரை ப்ரீபெய்ட் திட்டங்களை (Jio Prepaid Plans) வழங்குகிறது.
ஜியோ தனது பயனர்களுக்கு அதிகமான நன்மைகளை வழங்குகிறது. இதில் கூடுதல் டேட்டா மற்றும் இலவச Disney+ Hotstar மொபைல் சந்தா போன்ற நன்மைகளை இலவசமாக வழங்குகிறது. ஜியோ நிறுவனம் அதன் 4G திறன் கொண்ட ரிலையன்ஸ் ஜியோ ஃபோனுக்காக வடிவமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களையும் வழங்குகிறது.

கூடுதலாக, அனைத்து ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களிலும் JioTV, JioCinema மற்றும் பல கூடுதல் நன்மைகளை பிரத்தியேகமாக ஜியோ பயனர்களுக்கு மட்டும் ஜியோ ஆப்ஸ் (Jio Apps) வழியாக வழங்குகிறது. சரி, இப்போது இன்றைய தேதியில், ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களை அப்டேட் செய்த பிறகு, ரூ.200 விலைக்கு கீழ் எத்தனை திட்டங்களை வழங்குகிறது என்று பார்க்கலாம்.
உங்கள் பாக்கெட்டில் ஓட்டை விழாமல், ரூ.200 விலைக்குள் எத்தனை ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கிறது? இவை என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க. முதலில் ஜியோ நிறுவனம் வழங்கும் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டமான ரூ.119 திட்டத்தை பற்றி பார்க்கலாம். ஜியோவின் ரூ.119 திட்டம் உங்களுக்கு தினசரி டேட்டா நன்மையுடன் வருகிறது. இது தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
இத்துடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை கிடைக்கிறது. இதில் SMS நன்மை கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடி காலம் வெறும் 14 நாட்கள் மட்டுமே. அடுத்தபடியாக, ரூ.200 விலை கீழ் இருக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Prepaid Recharge Plans) என்றால், அது ரூ.149 திட்டமாகும்.

ரூ.149 திட்டமானது தினசரி 1ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் பேக் செய்கிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு 300 SMS கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி 20 நாட்களாகும். அதிக மக்களால் அடிக்கடி ரீசார்ஜ் செய்யப்படும் மலிவு விலை ஆல்-இன்-ஒன் பேக் திட்டம் இதுவாகும்.
ஜியோவின் ரூ.155 திட்டமானது ஒட்டுமொத்தமாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் தினசரி டேட்டா நன்மை கிடையாது. இதுதவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இதுவும் 300 SMS நன்மையுடன் வருகிறது. இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி 28 நாட்களாகும்.
அடுத்தபடியாக, ஜியோவின் ரூ.179 திட்டம் தினசரி 1ஜிபி டேட்டாவை 24 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 SMS நன்மையுடன் வருகிறது. இறுதியாக , ஜியோவின் ரூ.199 திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது.
இந்த திட்டமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 SMS நன்மையுடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். ஜியோ நிறுவனம் ரூ.200 விலை கீழ் 5 வெவ்வேறு நன்மைகளை வழங்கும் திட்டங்களை வழங்குகிறது. இதில் எந்த திட்டம் உங்களுக்கு உகந்தது என்று பார்த்து ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








