அடேங்கப்பா! கம்மி காசில் 336 நாள் வேலிடிட்டி தருகிறதா Jio? இது என்ன புதுசா ஒரு ரீசார்ஜ் திட்டம்!
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏன் ஜியோ மட்டும் முன்னிலையில் உள்ளது தெரியுமா? காரணம், இது குறைந்த விலையில் சிறந்த நன்மைகளை வழங்குகிறது. குறைந்த விலையில் குறைந்த செல்லுபடி வழங்கும் மற்ற திட்டங்களை விட, 1 வருட திட்டம் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம்?
யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டோம் தானே.! அதேபோலத் தான், ஜியோ நிறுவனமும் மக்களை வேண்டாம் என்று சொல்லாத அளவிற்குச் சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மிகவும் குறைந்த விலை 1 வருட ரீசார்ஜ் திட்டத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த திட்டத்தை தான் அனைவரும் விரும்புகின்றனர்.

கம்மி காசில் 1 வருடத்திற்கு நெருக்கமான வேலிடிட்டி கிடைக்குமா?
காரணம், இது மற்ற ரீசார்ஜ் திட்டங்கள் போல் இல்லாமல், குறைந்த விலையில் 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கம்மி விலையில் வழங்குகிறது. ஜியோ தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. மக்கள் ஜியோவை முதல் தேர்வாக வைப்பதற்கு, அதன் விலை ஒரு காரணமாக இருந்தாலும் கூட, நிறுவனம் வழங்கும் நன்மைகள் மற்றும் பலன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதே உண்மை.
இந்த வரிசையில், ஜியோ வழங்கும் ஒரு பெஸ்டான ரீசார்ஜ் திட்டம் தான் ரூ.895 விலையில் கிடைக்கும் ரீசார்ஜ் பிளான் ஆகும். இந்த திட்டம் 336 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது, இதில் உங்களுக்கு 28 நாட்களுக்கு 12 சுழற்சி திட்டங்கள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒட்டுமொத்தமாகக் கிடைக்கும் ஒட்டுமொத்த டேட்டாவின் அளவு 24ஜிபி-யை தொடுகிறது. இத்துடன் தினமும் 2ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Jio ரூ.895 திட்டத்துடன் கிடைக்கும் வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS நன்மைகள் எவ்வளவு?
வாய்ஸ் காலிங்கை பற்றிப் பார்க்கையில், இந்த திட்டம் உங்களுக்கு வழக்கம் போல அலிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சத்தை வழங்குகிறது. இத்துடன், நிறுவனம் அதன் அணைத்து திட்டங்களில் வழங்கும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் இத்துடன் சேர்த்து வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்குத் தொடர்ந்து 28 நாட்களுக்கு 50SMS என்ற விதத்தில் SMS நன்மையை வழங்குகிறது. இத்தகைய திட்டத்தை மற்ற நிறுவனங்கள் எதுவும் வழங்கவில்லை.
பொதுவாக, 365 நாட்கள் செல்லுபடியாகும் 1 வருட வேலிடிட்டி திட்டங்களைப் பற்றிப் பேசுகையில், அதன் விலை சுமார் ரூ.1500 முதல் துவங்கி ரூ.2500 என்ற விலையைத் தாண்டி செல்கிறது. ஆனால், ஜியோ நிறுவனமோ, அப்படி இல்லாமல், ரூ.1000 விலைக்கும் குறைவான விலையில், 1 வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் செயல்படும் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி.. அதிக நன்மை.. அதிக பலன்.!
உண்மையிலேயே, இது பாராட்டிற்குரியது. குறைந்த விலையில் சிறந்த பலன்களை குறுகிய காலத்திற்கு மட்டும் வழங்காமல், ஜியோ நிறுவனம் நீண்ட நாட்களுக்குச் செல்லுபடியாகும் விதத்தில் அமைத்துள்ளது. இது பட்ஜெட் பிரியர்களுக்கு மிகவும் உகந்த ஒரு ரீசார்ஜ் திட்டமாக மாறப்போகிறது. வெறும் ரூ. 895 விலையில் 336 நாட்களுக்கு வேலிடிட்டியை தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வழங்கும் இந்த திட்டம் பெஸ்ட் லாபம் தரக்கூடிய திட்டமாகத் திகழ்கிறது.
வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், போதும், அதுவும் மிகவும் குறைந்த விலையில் 1 வருடத்திற்கு நெருக்கமான வேலிடிட்டியை பெறக்கூடிய திட்டங்களைத் தேடும் நபர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்தது. இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை இங்கே கமெண்டில், கருத்துக்களை பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








