Jio சிம் இருக்கா.. இனிமே அன்லிமிடெட் 5ஜி.. வாய்ஸ் கால்கள்.. ஓடிடி சந்தா.. ரூ.349 விலையில ஆரம்பம்.. 4 திட்டம்!
உங்களிடம் ஜியோ (Jio) சிம் கார்டு இருந்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு (Unlimited 5G Data) ரீசார்ஜ் செய்ய ரூ.500-க்கும் கீழ் 4 திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் தொடங்கி 11+ ஓடிடி ஆப்களின் சலுகைகளும் கிடைக்கின்றன. எந்த திட்டம் உங்களுக்கு சரியாக இருக்கும் என்பதை இந்த திட்டங்களின் விவரங்களை பார்த்துவிட்டு முடிவெடுங்கள். ஜியோவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற அடிமட்ட விலையில் இந்த 4 நான்கு திட்டங்கள் மட்டுமே பெஸ்ட் ஆப்ஷன்களாக இருக்கிறது.
சொல்லப்போனால், ரூ.198 விலையில் இருந்து 5ஜி திட்டம் தொடங்குகிறது. ஆனால், அதில் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, குறைந்தபட்சம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஜியோ 5ஜி திட்டங்களை (Jio 5G Plan) மட்டுமே இங்கே கொடுத்துள்ளோம். இது ரூ.500-க்கு மேல் போகாது. அதற்குள் ஜியோ கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

முதலில் ரூ.349 மதிப்பிலான ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெறலாம். வேலிடிட்டியும் 28 நாட்களாக இருக்கிறது. ஆகவே, இந்த நாட்களில் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், தினமும் 2 ஜிபிக்கான 4ஜி டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். இந்த 4ஜி டேட்டா முடிந்தாலும் டேட்டா கிடைக்கும்.
அதாவது, 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். ஆனால், 5ஜி நெட்வொர்க் கிடைக்காத இடத்தில் மட்டுமே 4ஜிக்கு பிறகு இதை பயன்படுத்த முடியும். இல்லையென்றால், 5ஜி டேட்டாவே போதுமானதாக இருக்கும். இந்த டேட்டா சலுகைகளுடன் மட்டுமே இந்த திட்டம் கிடைக்கவில்லை. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் கஸ்டமர்களுக்கு கொடுத்து இருக்கிறது.
28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி அல்லது ரோமிங் கால்கள் வருகின்றன. 100 எஸ்எம்எஸ்கள் தினசரி லிமிட்டில் செய்து கொள்ள கிடைக்கிறது. ஜியோ ஆப்களின் சலுகைகளும் இதற்கு கிடைக்கின்றன. 28 நாட்கள் வேலிடிட்டியில் தொடங்கும் முதல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் இதுவாகும். இதற்கு அடுத்து ரூ.399 விலையில் 5ஜி திட்டம் தொடங்குகிறது.
இந்த ஜியோ ரூ.399 திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தலாம். ஆனால், 4ஜி டேட்டாவானது கூடுதலாக கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 2 ஜிபி டேட்டா தினசரிக்கு கிடைத்தால், இந்த திட்டத்தில் 2.5 ஜிபி டேட்டாவாக தினசரிக்கு கொடுக்கப்படுகிறது.
மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களை கொடுக்கிறது. இதற்கு அடுத்த திட்டம் ஓடிடி ஆப்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கூடவே வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. இந்த திட்டம் ரூ.448 விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
முதலில் பார்த்த திட்டத்தை போலவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா, நாளொன்றுக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் டேட்டாவை கொடுக்கிறது. அதேபோல வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளையும், ஜியோ ஆப்களின் சலுகைகளையும் கொடுக்கிறது. ஆனால், கூடுதல் விலைக்கு ஏற்ப 11+ ஓடிடி ஆப்களையும் பேக் செய்து கொடுத்துள்ளது. ஜியோசினிமா பிரீமியம் உள்ளது.
சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, சன்நெக்ஸ்ட், டிஸ்கவரிபிளஸ், ஜியோடிவி, சாவ்பால் போன்ற ஓடிடி ஆப்கள் கூடுதலாக கிடைக்கின்றன. இதற்கு அடுத்து ரூ.449 விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டா தினமும் கிடைக்கும். மற்ற சலுகைகள் முதலில் பார்த்த 5ஜி திட்டத்தை போலவே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








