Home
News

2025 புத்தாண்டு: மூன்று மாதங்கள் வேலிடிட்டி மற்றும் எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கும் Jio திட்டங்கள்..

ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. எனவே தான் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது 2025-ல் மூன்று மாதம் வேலிடிட்டி மற்றும் எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த மூன்று மாதங்கள் வேலிடிட்டி தரும் திட்டங்களின் நன்மைகள் மற்றும் சலுகைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மூன்று மாதங்கள் வேலிடிட்டி.. எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கும் Jio  திட்டங்கள்

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டம் மூலம் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளன.

அதன்படி ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் கிடைக்கும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 98 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

மூன்று மாதங்கள் வேலிடிட்டி.. எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கும் Jio  திட்டங்கள்

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ. இதுதவிர பல்வேறு அசத்தலான
நன்மைகள் இதில் உள்ளன

ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இந்த திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு அசத்தலான புதிய திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio prepaid plans with three months validity and extra data in 2025: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X