Jio சிம் இருக்கா.. மாதம் ரூ.145 விலையில் 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. முழு பட்டியல்!
ஜியோவில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் முதல் தினசரி டேட்டா வரையில் கிடைக்கின்றன. கூடுதலாக ஓடிடி சந்தா, 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கின்றன. மூன்று திட்டங்களில் வருடாந்திர வேலிடிட்டி கிடைக்கிறது.
ஜியோ ரூ.1748 திட்டத்தின் முக்கிய சலுகைகள்: 336 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த ஜியோ ரூ.1748 திட்டம் கொடுக்கிறது. 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. மேலும், ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆப்கள் வருகின்றன.

இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கின்றன. டேட்டா சலுகை கிடைக்காது. 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுத்துள்ளது. இதில் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தினசரி டேட்டா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டிக்கு ஜியோ ரூ.3599 திட்டத்தை பெற்று கொள்ளலாம். கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கும்.
ஜியோ ரூ.3599 திட்டத்தின் முக்கிய சலுகைகள்: 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை இந்த ஜியோ ரூ.3599 திட்டம் கொடுத்துள்ளது. 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். 5ஜி ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது.
4ஜி ஸ்மார்ட்போனாக இருந்தால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் 365 நாட்களுக்கு மொத்தமாக 912.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை ஜியோ ரூ.3599 திட்டம் கொடுக்கிறது. ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கிடைக்கிறது.
மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் & டிவி (JioHotstar Mobile & TV) சந்தாவானது முதல் 3 மாதங்களுக்கு மட்டும் கிடைக்கிறது. ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை வழியாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது. 18 மாதங்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.
ஜியோ ரூ.3999 திட்டத்தின் முக்கிய சலுகைகள்: 365 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டமும் கொடுக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை கொடுத்துள்ளது. இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது.
அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கொடுத்துள்ளது. 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் & டிவி (JioHotstar Mobile & TV) சந்தா கிடைக்கிறது. ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை வழியாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் இந்த திட்டத்துக்கும் கிடைத்துள்ளது. ஜெமினி ப்ரோ சந்தாவில் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகள் வருகின்றன.
18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் கூடுதலாக பேன் கோட் (FanCode) சந்தா கிடைக்கிறது. ஆனால், இதை ஜியோ டிவி (Jio TV) ஆப் வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும். ஜியோ நிறுவனத்தில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்களாக இந்த 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. வாய்ஸ் ஒன்லி முதல் தினசரி டேட்டா வரையில் கொடுக்கின்றன.


Click it and Unblock the Notifications