Home
News

ஒரே ரீசார்ஜில் Netflix மற்றும் அன்லிமிடெட் சலுகைகள்.. ஜியோவின் சூப்பர் ப்ரீபெய்ட் பிளான்கள்..

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது. ஆனால் ஜியோ நிறுவனம் இப்போது வரை எந்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் நீக்கவில்லை. அதாவது இந்நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே தான் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ (jio) நிறுவனம் பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே ரீசார்ஜில் Netflix மற்றும் அன்லிமிடெட் சலுகைகள்..

ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் இதில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதுவும் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1299 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம்.

ஒரே ரீசார்ஜில் Netflix மற்றும் அன்லிமிடெட் சலுகைகள்..

ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக நெட்பிளிக்ஸ் சந்தாவை தனியாகப் பணம் கொடுத்து ரீசார்ஜ் செய்வதை விட இந்த இரண்டு ஜியோ திட்டங்களில் எதாவது ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் இலவசமாக நெட்பிளிக்ஸ் சந்தாவை பெற முடியும். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல்வேறு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Prepaid Plans With Netflix: Get Unlimited Benefits With Your Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X