ரிலையன்ஸ் ஜியோ பயனர்களே., நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக டேட்டா நன்மையை தரும் பல திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையுடன் கிடைக்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.151 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ. 151 திட்டமானது, பயனர்களுக்கு 8ஜிபி டேட்டாவை வழங்கும் டேட்டா-ஒன்லி திட்டமாகும். குறிப்பாக இந்த திட்டம் 3 மாத டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கிறது. அதேபோல் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, பயனர்களுக்குச் செயலில் உள்ள அடிப்படைத் திட்டமும் தேவை என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோ ரூ.333 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.333 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதன்பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது. குறிப்பாக மூன்று மாத Disney+ Hotstar மொபைல் சந்தா, ஜியோ சினிமா, ஜியோ செய்திகள், ஜியோ டிவி மற்றும் பல ஜியோ ஆப்கள் சேவையும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஜியோ ரூ.333 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிரமூன்று மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் இந்த ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.783 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.783 ப்ரீபெய்ட் திட்டமும் மூன்று மாதங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்
உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் புதிய ஜியோ கேம் கண்ட்ரோலரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அருமையான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. ஜியோ கேம் கண்ட்ரோலர் ஆனது ஆண்ட்ராய்டு டேப்லெட் மற்றும் ஆண்ட்ராய்டு டிவிகளுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பா சிறந்த கேமிங் அனுபவம் பெற இந்த கண்ட்ரோலரை ஜியோ செட் டாப் பாக்ஸ் கொண்டு பயன்படுத்த ஜியோ
அறிவுறுத்துகிறது.

அதேபோல் இது வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் ஆகும். பின்பு இதில் நீண்ட பேக்கப் வழங்கும் ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி உள்ளது. பின்பு இதன் எடை மிகவும் குறைவு. குறிப்பாக இந்த ஜியோ கேமிங் கண்ட்ரோலர் சாதனத்தில் இரண்டு வைப்ரேஷன் மோட்டார்கள், இரண்டு பிரெஷர் பாயிண்ட் ட்ரிகர்கள், ப்ளூடூத் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. மேலும் ப்ளூடூத் வசதி கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் இந்த ஜியோ கேமிங் கண்ட்ரோலர் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் ஆனது 10 மீட்டர் வரையிலான வயர்லெஸ் ரேன்ஜ் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சாதனம் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.3,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த கேம் கண்ட்ரோலருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications