Home
News

OTT நன்மைகளுடன் கிடைக்கும் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரூ.499 மதிப்பிலான Disney+ Hotstar சந்தா இலவசமா?

இந்திய நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதன் சந்தாதாரர்களின் தேவைக்கேற்ப பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. மலிவான தினசரி டேட்டா திட்டங்களில் இருந்து நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் OTT உடனான ப்ரீபெய்ட் திட்டங்கள் வரை, ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்து வகையான நன்மைகளையும் அதன் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. சமீபத்தில், பொழுதுபோக்குத் துறைக்கான தேவை, குறிப்பாக OTT இயங்குதளங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. இதை கருத்தில் கொண்டு பயனர்களும் அவர்களுக்கான சரியான திட்டத்தைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.

OTT நன்மைகளுடன் வரும் ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த குறைந்த விலை திட்டங்கள்

OTT நன்மைகளுடன் வரும் ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த குறைந்த விலை திட்டங்கள்

மேலும், பயனர்கள் இப்போது தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய OTT நன்மை கிடைக்கும் பட்ஜெட் விலை சிறந்த திட்டங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளுக்காக ஜியோ அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் பல தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தக் கட்டுரையில், OTT நன்மைகளுடன் வரும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் குறுகிய மற்றும் நடுத்தர கால செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மை உடன் கிடைக்கும் மூன்று திட்டங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மை உடன் கிடைக்கும் மூன்று திட்டங்கள்

தெரியாதவர்களுக்கு, ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மை உடன் கிடைக்கும் மூன்று தினசரி டேட்டா திட்டங்களை தன் வசம் வைத்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள முதல் திட்டம், நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கட்டண உயர்வுக்குப் பிறகு தொலைத்தொடர்பு நிறுவனத்தால் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது ஒரு குறுகிய செல்லுபடியாகும் திட்டம் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த திட்டமானது உங்களுக்கு ரூ. 499 விலையில் வருகிறது.

ஜியோ வழங்கும் ரூ. 499 திட்டம்

ஜியோ வழங்கும் ரூ. 499 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 499 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் வரை தினமும் இத்திட்டம் உங்களுக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தை வாங்குவதன் மூலம் புதிய பயனர்கள் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான சந்தாவையும் பெறுகிறார்கள்.

ரூ. 499 மதிப்பிலான Disney+ Hotstar சந்தா இலவசமா?

ரூ. 499 மதிப்பிலான Disney+ Hotstar சந்தா இலவசமா?

இந்த திட்டத்தை வாங்குவதன் மூலம், பயனர்கள் OTT இயங்குதளமான Disney+ Hotstar சேவைக்கான ஒரு வருட சந்தாவைப் பெறுகிறார்கள். இதைத் தனியாக வாங்க நினைத்தால் பயனர்கள் ரூ.499 செலவிட வேண்டும். ஆனால், இந்த திட்டத்துடன் இந்த Disney+ Hotstar சந்தா உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. பட்டியலில் உள்ள இரண்டாவது திட்டமானது ஜியோவின் கனரக தரவுத் திட்டமாகும், இது OTT இயங்குதளத்திற்கான அணுகலுடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ பல OTT தொகுக்கப்பட்ட பேக்குகளை வழங்குகிறது, இருப்பினும், இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ.601 விலையில் வருகிறது.

ஜியோ வழங்கும் ரூ. 601 திட்டம்

ஜியோ வழங்கும் ரூ. 601 திட்டம்

இந்த திட்டம் ஒரு குறுகிய கால செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தினசரி கிடைக்கும் 3ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 6ஜிபி டேட்டாவையும் இந்த திட்டம் வழங்குகிறது. ஜியோவின் ரூ. 601 திட்டமானது, ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைக் கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது. இதன் மதிப்பு ரூ.499 ஆகும். ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல போன்ற பல்வேறு ஜியோ பயன்பாடுகளையும் பயனர்கள் அனுபவிக்க முடியும்.

ஜியோ வழங்கும் ரூ. 799 திட்டம்

ஜியோ வழங்கும் ரூ. 799 திட்டம்

கடைசியாக, முன்னணி டெலிகாம் ஆபரேட்டர், நல்ல டேட்டா மற்றும் OTT நன்மைகளுடன் வரும் நடுத்தர கால செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை மட்டுமே வழங்குகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் வருடாந்திர சந்தாவுடன் வரும் ஜியோவின் தினசரி டேட்டா திட்டம் ரூ.799 திட்டமாகும். நவம்பரில் கட்டண உயர்வுகள் விதிக்கப்பட்டபோது இந்தத் திட்டம் அதன் முந்தைய விலையான ரூ.666 இல் இருந்து திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இந்த திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

ரூ. 799 திட்டம் வழங்கும் நன்மைகள்

ரூ. 799 திட்டம் வழங்கும் நன்மைகள்

ஜியோவின் இந்த ரூ. 799 திட்டமானது அதன் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்புத் திட்டமாகும். இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் ஜியோ நிறுவனத்தின் கூடுதல் நன்மையாக, இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல போன்ற சில ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலுடன் இந்தத் திட்டம் வருகிறது. இந்த திட்டத்தின் OTT நன்மை பற்றி பார்க்கையில், இந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான ஒரு வருடத்திற்கு அனுமதி வழங்குகிறது. இதன் மதிப்பு ரூ.499 ஆகும். கூடுதல் செலவு எதுவும் இன்று இந்த திட்டம் உங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Prepaid Plans With Disney Hotstar OTT Benefits Subscription Worth Rs 499 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X