Home
News

ரூ.579 முதல்.. 56 நாட்கள் வேலிடிட்டி தரும் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்.. தினமும் 2ஜிபி டேட்டா.. என்ன விலை?

ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது ஜியோ (Jio) நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 56 நாட்கள் வேலிடிட்டி தரும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 579 prepaid plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த ஜியோ ரூ.579 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

ரூ.579 முதல்.. 56 நாட்கள் வேலிடிட்டி தரும் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்..

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை இந்த ஜியோ திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜியோ ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன.

ஒருவேளை அதிக டேட்டா மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது ஜியோ ரூ.949 திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

ரூ.579 முதல்.. 56 நாட்கள் வேலிடிட்டி தரும் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan)தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

குறிப்பாக 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற சலுகைகளை ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio Prepaid Plans with 56 Days Validity: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X