Home
News

கம்மி விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி.. எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Jio-வின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதபோல் ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் விதமாக பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி கொண்டிருக்கிறது ஜியோ நிறுவனம்.

அதேபோல் கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். சரி இப்போது ஜியோ (Jio) நிறுவனம் கம்மி விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டங்கள் மற்றும் அந்த திட்டங்களின் நன்மைகளை குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Jio-வின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 112ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.589 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனறே இந்த திட்டத்தில் மொத்தமாக 112ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் JioSaavn Pro, ஜியோடிவி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டம் வழங்குகிறது.

ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.529 ப்ரீபெய்ட் திட்டம் அனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குறிது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் ரிசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இந்த திட்டம் JioSaavn Pro, ஜியோடிவி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது.இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக இந்த 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் ஜியோ நிறுவனம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Jio-வின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டம் கூடுதலாக 6ஜிபி டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். பின்பு கூடுதலாக 40ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 292ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio prepaid plans with 56 days validity: Check full list here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X