ரூ.500 போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வசதிகள்.. அசத்தும் 7 ஜியோ திட்டங்கள்..
ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் கூட நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை வழங்கும் இரண்டு அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்தது ஜியோ.
அதாவது ரூ.1099 மற்றும் ரூ.1499 விலைகளில் நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக இந்த புதிய திட்டங்கள் 2ஜிபி மற்றும் 3ஜிபி வரை டேட்டா நன்மைகள், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது ஜியோ ரூ.500-க்கு கீழ் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 46ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் ஜியோடிவி , ஜியோசினிமா, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட அசத்தலான சலுகைகள் இதில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குத் தினசரி 2.5ஜிபி கிடைக்கும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. குறிப்பாக 30 நாள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது.

ஜியோ ரூ 399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குத் தினசரி 3ஜிபி கிடைக்கும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் பல சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக 399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாள் வேலிடிட்டி கிடைக்கிறது. இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது.
ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.


Click it and Unblock the Notifications








