Home
News

ரூ.449 முதல்.. தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் Jio திட்டங்கள்.. இதோ பட்டியல்..

ஜியோ (jio) நிறுவனம் இப்போதும் கூட பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. எனவே தான் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அதிக நன்மைகளைத் தரும் ஜியோ திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது(Jio Rs 1799 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.

தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் Jio திட்டங்கள்

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ .1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதன்படி அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1199 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். நீங்கள் ஜியோவின் ரூ.499 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல்
(Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கொடுக்கப்படுகிறது.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Prepaid Plans with 3GB Daily Data : Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X