ஜியோ சிம் இருக்கா? தினமும் 2.5ஜிபி டேட்டா, OTT, வாய்ஸ் கால்கள், 1000 டிவி சேனல்கள், எஸ்எம்எஸ்.. இதோ பட்டியல்..
ஜியோ (jio) நிறுவனம் அவ்வப்போது அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினமும் 2.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. அந்த திட்டங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3999 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. நீங்கள் இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

குறிப்பாக ஃபேன் கோட் (Fan Code) என்கிற தளத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.
அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், மேலும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா, கேன்வா ப்ரோ அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் 120ஜிபி போனஸ் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ஜிபி டேட்டா வீதம் 120ஜிபி டேட்டா போனஸ் கிடைக்கும்.
நீங்கள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1032.5ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
அதுவும் 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சேவைக்கான சந்தா, நானோ பானானா ஏ.ஐ, 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டம் மூலம் வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதுவும் ஜியோ டிவி வழியாக மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். கேன்வா ப்ரோ அணுகல், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, EasemyTrip வழங்கும் விமானங்கள் மற்றும் ஓட்டல் புக்கிங்களில் ரூ.2200 வவுச்சர், Cinepolis திரையரங்குகளில் ரூ.150 தள்ளுபடி வவுச்சர், ரூ. 200 AJIO தள்ளுபடி வவுச்சர் போன்ற சலுகைகளும் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
ஜியோவின் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 2025 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 200 நாட்கள் இந்த வேலிடிட்டி திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 500ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கும். இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), கேன்வா ப்ரோ அணுகல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.2025 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோ டிவி (JioTV) ஜியோ கிளவுட் (JioCloud), கேன்வா ப்ரோ அணுகல், ஜியோஹாட்ஸ்டார், ஜியோகேம் மொபைல், ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications
