தினமும் 1.5GB டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. கம்மி விலை.. ஜியோவின் பக்கா பிளான்.. அறக்க பறக்கும் ரீசார்ஜ்..
ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை வழங்கும் ரூ.1099 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திடங்களை அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம். குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா தரும் திட்டங்கள் ஜியோ நிறுவனத்திடம் உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் கம்மி விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 34.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.529 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும்ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் ஜியோ நிறுவனத்தின் ரூ.739 திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் வழங்குகிறது. இதுதவிர ஜியோவின் ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 1.5ஜிபி டேட்டா மற்றும் 336 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான புதிய திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications