Home
News

JioHotstar சந்தா வேண்டுமா? இனி மூன்று ஜியோ திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க.. என்னென்ன நன்மைகள்?

ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து அட்டகாசமான சலுகைகளை வழங்கி கொண்டே இருக்கிறது ஜியோ (jio). அதுவும் பட்ஜெட் விலை திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி நன்மையை வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) ஆனது 84 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது. குறிப்பாக தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

JioHotstar சந்தா வேண்டுமா? இனி மூன்று ஜியோ திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க.

மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஜியோ நிறுவனத்தின் ரூ 195 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 195 Prepaid Plan) ஆனது டேட்டா + ஓடிடி சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. அதன்படி இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 15 ஜிபி டேட்டா மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல ஜியோஹாட்ஸ்டார் சந்தா 90 நாட்களுக்கு கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை வேண்டும் என்றால் வேறொரு திட்டத்தில் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ 100 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 100 Prepaid Plan) கூட டேட்டா + ஓடிடி சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. அதன்படி இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்,5 ஜிபி டேட்டா மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஜியோஹாட்ஸ்டார் சந்தா 90 நாட்களுக்கு கிடைக்கிறது.

குறிப்பாக இந்த மூன்று திட்டங்களும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்குவதால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஒருவேளை ஜியோஹாட்ஸ்டார் சந்தா வேண்டாம் நெட்பிளிக்ஸ் சந்தா வேண்டும் என நினைக்கும் பயனர்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

அதன்படி ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கிறது. ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ஜியோ திட்டம்.

photo credit: thequint

More from GizBot

Best Mobiles in India

English summary
jio prepaid plans that provide jiohotstar subscription: check list here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X