Home
News

அள்ளி தரும் Jio.. தினமும் 2GB டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. இந்த மூன்று திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ நிறுவனம் சமீபத்தில் 5.5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. குறிப்பாக இதன் மூலம் அதிவேக இணையத்தை பயன்படுத்தலாம். ஆனாலும் இந்த தொழில்நுட்பம் சில போன்களில் மட்டுமே வருகிறது. கூடிய விரைவில் மற்ற போன்களுக்கு இந்த 5.5ஜி தொழில்நுட்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளையும் செயல்படுத்தி வருகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் ஓடிடி மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த மூன்று திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அள்ளி தரும் ஜியோ.. இந்த மூன்று திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5)ஆகிய இரண்டு தளங்களின் சந்தா வழங்குகிறது ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அள்ளி தரும் ஜியோ.. இந்த மூன்று திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Prepaid plans that offer OTT subscription at budget prices: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X