அவசரப்பட்டு வெளிய போனவங்க எல்லாரும் திரும்ப வாங்க.. மீண்டும் குறைந்த விலையில் சலுகையை வழங்கத் தொடங்கிய Jio..
ஜியோ (jio) நிறுவனம் சமீபத்தில் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது கடந்த மாதம் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியது ஜியோ. இதனால் பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களை தக்கவைக்க ஜியோ நிறுவனம் மீண்டும் சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை வழங்க ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் கூட புதிய ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டு வந்தது ஜியோ நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் கம்மி விலையில் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 198 Prepaid Recharge Plan)ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
அதாவது ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)வழங்குகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோகிளவுட் (JioCloud), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனத்தின் ரூ 448 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 448 Prepaid Recharge Plan) ஆனது தினமும் 2ஜிபி அதிவேக டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில். இதுதவிர ரூ 448 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி நன்மைகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி SonyLiv, Zee5, JioCinema Premium, Lionsgate Play, Discovery Plus, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, JioTV மற்றும் JioCloud போன்ற பல OTT தளங்களுக்கு இலவச சந்தாக்களை வழங்குகிறது ரூ 448 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்.
அதேபோல் சமீபத்தில் ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,599 வருடாந்திர மொபைல் திட்டம் இலவசமாகக் கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சலுகை ஜியோ பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








