அசரவைக்கும் Jio.. வெறும் ரூ.349 போதும்.. 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
ஜியோ (jio) நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக டேட்டா மற்றும் அதிக சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களை விட ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களை மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது. அதாவது ஜியோ நிறுவனம் ரூ.349 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Plan) ஆனது தினமும் 2.5ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் செய்தால் மொத்தம் 75ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி வழங்குகிறது ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஜியோ திட்டம். மேலும் ஜியோ தினசரி 2.5ஜிபி டேட்டா தரும் அனைத்து திட்டங்களையும் இங்கே பார்க்கலாம்.
ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 2999 Plan) தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோ ரூ.3333 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 3333 Plan) தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஃபேன்கோட் (FanCode) தளத்தின் சந்தா கொடுக்கப்படுகிறது. சர்வதேச மற்றும் இந்திய விளையாட்டுப் போட்டிகளை இதில் பார்த்துக் கொள்ளலாம்
குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.3333 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3662 plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
இதுதவிர சோனி லிவ் மற்றும் ஜீ5-க்கு (SonyLiv,Zee5) சந்தாவை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது. குறிப்பாக அதிக டேட்டா மற்றும் ஒடிடி நன்மைகள் இதில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








