வெறும் ரூ.399 முதல் ரூ.3999 வரை.. தினமும் 2.5GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. Jio பெஸ்ட் திட்டங்கள்.. விட்றாதீங்க!
சமீபத்தில் ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தி அதிரவைத்தது. இதனால் பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் (bsnl) சிம் கார்டை வாங்கத் தொடங்கியுள்ளனர். அதுவும் ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கி வந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக தினமும் 2.5ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை தான் அதிக ஜியோ பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தற்போது தினமும் 2.5ஜிபி டேட்டா தரும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid recharge plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
அதன்படி அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த ஜியோ திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 3599 prepaid recharge plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் கிடைக்கும். ஆனாலும் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (jio rs 3999 prepaid recharge plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் கிடைக்கும். அதேசமயம் இந்த திட்டம் ஃபேன் கோட் (Fan Code) என்கிற ஓடிடி தளத்திற்கான இலவச அணுகலுடன் வருகிறது.
வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.


Click it and Unblock the Notifications








