Home
News

அள்ளி தரும் ஜியோ.. ரூ.148 முதல் ரூ.4498 வரை.. OTT.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்..

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ. குறிப்பாக ஜியோ அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய நிலையிலும், ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தவில்லை. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.148 முதல் ரூ.4498 வரை ஜியோ நிறுவனம் அதிக ஓடிடி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

அள்ளி தரும் ஜியோ.. ரூ.148 முதல் ரூ.4498 வரை.. OTT.. வாய்ஸ் கால்..

ஜியோ ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 148 plan) ஆனது தினமும் 10ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். இருந்தபோதிலும் 12 ஓடிடி தளங்களின் சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம்.

அதாவது சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), கண்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), டாகுப்பே (DocuBay), எபிக் ஆன் (EPIC On), மற்றும் ஹொய்ச்சொய் (Hoichoi) உள்ளிட்ட ஓடிடி நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் ( jio rs 398 plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

அதேபோல் 12 ஓடிடி தளங்களின் சந்தாக்கள் வழங்குகிறது ஜியோ ரூ.398 திட்டம். அதன்படி, சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), சாவ்பால் (Chaupal), எபிக் ஆன் (EPIC On), டாகுப்பே (DocuBay), பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்ச்சோய் (Hoichoi) போன்றவை கிடைக்கும்.

ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 1198 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், 14 ஒடிடி சந்தா வழங்குகிறது இந்த அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சவ்பால் (Chaupal), டாகுபே (Docubay), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi), ஜியோ டிவி (JioTV) உள்ளிட்ட ஓடிடி சந்தா கிடைக்கும்.

அள்ளி தரும் ஜியோ.. ரூ.148 முதல் ரூ.4498 வரை.. OTT.. வாய்ஸ் கால்..

ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம் ( jio rs 4498 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 730ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டமும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) உள்ளிட்ட 14 ஓடிடி தளங்களின் சந்தா வழங்குகிறது.

குறிப்பாக வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்களின் அணுகல் வழங்கும் இந்த அசத்தலான ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio prepaid plans ranging from Rs 148 to Rs 4498 with OTT and 2GB data per day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X