இனி இந்த 2 பெஸ்ட் Jio ரீசார்ஜ் விட்றாதீங்க.. நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்.. தினமும் 2ஜிபி டேட்டா..வாய்ஸ் கால்கள்..
ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட சில ப்ரீபெய்ட் திட்டங்களில் தீபாவளி சலுகைகளை அறிவித்து இருந்தது ஜியோ நிறுவனம். அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தை விட கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம்.
எனவே தான் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை விட ஜியோவின் திட்டங்களில் அதிக பயனர்கள் ரீசார்ஜ் செய்கின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தா வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த நீங்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்(Disney Plus Hotstar) வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud போன்ற சலுகைகளை ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.
ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதன்படி ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1299 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications