ஜியோ வழங்கும் எக்ஸ்ட்ரா டேட்டா.. ரூ.459 முதல்.. OTT, வாய்ஸ் கால்கள்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. விட்றாதீங்க..
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட பட்ஜெட் விலை திட்டங்களில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ (jio) நிறுவனம். எனவே தான் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றன். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 459 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் கூடுதலாக 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே இந்த ஜியோ திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்கும். இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஸ்னாப்சாட்+ சந்தா (Snapchat+ subscription), ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஃபேன்கோட் (FanCode) போன்றவற்றின் அணுகலும் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud)போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.
அதேபோல் ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா ஜியோ ரூ.459 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதனுடன் Nano Banana அம்சத்தையும் பயன்படுத்த முடியும். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பல நன்மைகள் இந்த புதிய திட்டத்தில் உள்ளன.
ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.
மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.
தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ ரூ.749ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.
ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications