1 இல்ல.. 3 ஆப்ஷன் இருக்கு.. ரூ.200 முதல் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் Jio திட்டங்கள்.. அன்லிமிடெட் சலுகைகள்!
ஜியோ நிறுவனம் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் அதிகம் அறிமுகம் செய்கிறது. குறிப்பாக ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய தான் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தான் கம்மி பட்ஜெட்டில் ஓடிடி சந்த தரும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ.
அதேபோல் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சில பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.200 திட்டம் (Jio Rs 200 Plan) மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். குறிப்பாக இதுவும் ஒரு டேட்டா பேக் ஆகும். அதேபோல் 28 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஜியோடிவி (JioTV) மொபைல் ஆப் மூலமாக 1000+ பிரீமியம் லைவ் டிவி (Live TV) சேனல்களை பார்க்க முடியும். இதுதவிர ஓடிடி நன்மைகளும் வழங்கப்படுகிறது.
அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 500 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal), போன்ற ஓடிடி சந்தா ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். பின்பு இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications