தினசரி 2.5ஜிபி அல்லது 3ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இந்த Jio ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் பெஸ்ட்.!
ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் எக்கச்சக்க சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கிவிட்டது.
குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினசரி 2.5ஜிபி அல்லது 3ஜிபி டேட்டா வழங்கும் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 75ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையைக் கூட வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் இதில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையைக் கூட வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அதேபோல் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் இதில் கிடைக்கிறது.
ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த 14 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குக் கூடுதலாக 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 44ஜிபி டேட்டா நன்மை உள்ளது.
அதேபோல் ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் இந்த திட்டம் வழங்குகிறது. குறிப்பாக இந்த குறைந்த விலை திட்டத்தில் அதிக நன்மை கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டம் கூடுதலாக 6ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். பின்பு கூடுதலாக 40ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 292ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. அதேபோல் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்கும் இந்த அட்டகாசமான திட்டம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








