Jio சிம் இருக்கா? ஒரே ரீசார்ஜ் 90 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி.. 200ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்..
ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi), பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது ஜியோ. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ (jio) நிறுவனம்.
எனவே தான் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 90 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் இரண்டு பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு ஜியோவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ரூ.899 திட்டத்தின் கீழ் மேலும் பல கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்கீழ் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு பொருட்களை வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் ரூ.399 தள்ளுபடியையும் பெறலாம். ஜியோசாவ்ன், ஜொமாட்டோ மற்றும் நெட்மெட்ஸ் மெம்பர்ஷிப்களும் இலவசமாக கிடைக்கும். இதேபோல் பல அசத்தலான சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
அதுவும் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு ஜியோவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ரூ.999 திட்டத்தின் கீழ் மேலும் பல கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்கீழ் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு பொருட்களை வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் ரூ.399 தள்ளுபடியையும் பெறலாம். ஜியோசாவ்ன், ஜொமாட்டோ மற்றும் நெட்மெட்ஸ் மெம்பர்ஷிப்களும் இலவசமாக கிடைக்கும்.
குறிப்பாக ஜியோவின் ரூ.899 மற்றும் 999 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது அதிக டேட்டா, ஓடிடி நன்மைகள் மற்றும் நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்குவதால் தேர்வு செய்யலாம். அதுவும் இந்த திட்டத்தில் வழங்கும் கூடுதல் பலன்கள் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications