Home
News

வெறும் ரூ.200 போதும்.. தினமும் 1.5ஜிபி டேட்டா.. OTT.. அன்லிமிடெட் சலுகைகள்.. மாஸ் காட்டும் ஜியோ..

ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா மற்றும் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம்.

குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் ரூ.200-க்கு கீழ் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வெறும் ரூ.200 போதும்.. தினமும் 1.5ஜிபி டேட்டா.. மாஸ் காட்டும் ஜியோ..

ஜியோ ரூ.199 திட்டம் ஆனது 23 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 34.5ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக ஜியோ ரூ.199 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud)உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா (1gb daily data) நன்மை உள்ளது. இதுவும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு 24 ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஜியோ டிவி ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் கூட தினசரி 1ஜிபி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. அதேபோல் இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட்(JioCloud) உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.

வெறும் ரூ.200 போதும்.. தினமும் 1.5ஜிபி டேட்டா.. மாஸ் காட்டும் ஜியோ..

ஜியோ ரூ.148 திட்டம் ஆனது ஓரு டேட்டா வவுச்சர் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 10ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் வழங்கப்படவில்லை. ஆனால் சோனிலிவ் (SonyLiv), ஜீ5 உட்பட மொத்தம் 12 ஓடிடி தளங்களில் சந்தா வழங்கப்படுகிறது.

குறிப்பாக ஜியோ ரூ.200-க்கு கீழ் வழங்கும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு ரூ.200-க்கு கீழ் பல அசத்தலான ப்ரிபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio prepaid plans offer data, unlimited calls under Rs 200: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X