Home
News

2025-ல் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் Jio திட்டங்கள்.. தினமும் 2ஜிபி டேட்டா.. மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ (Jio) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக டேட்டா மற்றும் கூடுதல் சலுகையை வழங்குகிறது ஜியோ நிறுவனம். எனவே தான் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது 2025-ல் பட்ஜெட் விலையில் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

2025-ல் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் Jio திட்டங்கள்..

ஹாட்ஸ்டார் சந்தா: ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம்(Jio Rs 949 prepaid plan) ஆனது 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) வழங்குகிறது. எனவே இந்த திட்டம் மூலம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அனைத்து புதிய படங்களையும் பார்க்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் . குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு தினமும் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) போன்ற அசத்தலான சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

அமேசான் பிரைம் சந்தா: ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) ஆனது 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தாவை வழங்குகிறது. அதேபோல் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

2025-ல் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் Jio திட்டங்கள்..

குறிப்பாக தினமும் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை கவனத்தில் கொள்க. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம். குறிப்பாக அமேசான் பிரைம் மற்றும் அதிக டேட்டா நன்மை இதில் உள்ளதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

photo credit: static.vecteezy.com, seekpng.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Prepaid Plans Offer Amazon Prime, Hotstar Subscription in 2025:check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X